இலங்கையில் 1 வாரத்தில் 35 சிறார் புலிகள் சாவு
கொழும்பு:
இலங்கையில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் ராணுவ வீரர்களுக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையே நடந்தமோதலில், புலிகள் அமைப்பின் சிறுவர் பிரிவைச் சேர்ந்த 35 பேர் கொல்லப்பட்டனர் என்று தெரிய வந்துள்ளது.
கடந்த சனிக்கிழமை மட்டும் ராணுவ வீரர்கள், புலிகள் மீது தாக்குதல் நடத்தியதில் 18 சிறுவர்கள் இறந்தனர்.இறந்தவர்களில் 18 பேர் சிறுமிகள்.
வெள்ளிக்கிழமை ராணுவ வீரர்களுக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே மோதல் நடந்தது. இந்த மோதலில்142 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டனர். இவற்றில் 17 பேர் ஆண் மற்றும் பெண் சிறுவர்கள்.
புலிகள் தங்களுக்கு சாதகமான சூழ்நிலை இல்லாதபோது, சிறார் புலிகளை போர்க்களத்திற்கு அனுப்பி, ராணுவவீரர்களுடன் மோத விடுவர் என்று சண்டையினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்யும் அமைப்பைச்சேர்ந்தவர்கள் கூறினர்.
ராணுவ செய்தித் தொடர்பாளர் சனத் கருணாரத்னே கூறுகையில், ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் மட்டும்விடுதலைப் புலிகளின் தாக்குதல் உக்கிரமாக இருக்கும். அவர்களிடம் ஆயுத பலம் குறைந்து காணப்படும் நேரத்தில்அவர்கள் சிறுவர்களைப் பயன்படுத்திக் கொள்வார்கள் என்று குற்றம் சாட்டியுள்ளார்.
கடந்த 5 மாதங்களுக்கு முன் யூனிசெப் வெளியிட்ட அறிக்கையில், 17 வயதுக்கும் குறைவான சிறுவர், சிறுமியரைஇயக்கத்தில் சேர்த்துக் கொள்வதையும், அவர்களை துப்பாக்கி ஏந்தி சண்டை போடுவதையும் நிறுத்தி விடுவோம்என்று அளித்த வாக்குறுதியை விடுதலைப் புலிகள் மறந்து விட்டனர் என்று தெரிவித்திருந்தது.












Click it and Unblock the Notifications