சிறந்த கவுன்சிலர்களுக்கு ஸ்டாலின் பரிசு
சென்னை:
சென்னை நகரில் சிறப்பாக பணிபுரிந்த பத்து கவுன்சிலர்களுக்கு, மேயர் ஸ்டாலின் பரிசு வழங்கி பாராட்டு தெரிவித்தார்.
சென்னை மாநகராட்சி சார்பில் சிறந்த வார்டுகளுக்கான பரிசளிப்பு விழா ரிப்பன் மாளிகையில் வெள்ளிக்கிழமை நடந்தது.
மாநகராட்சி கமிஷனர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். மேயர் ஸ்டாலின் கலந்து கொண்டு சிறந்த வார்டுகளாக தேர்ந்தெடுக்கப்பட்ட கவுன்சிலர்கள்பார்வதி, சீனிவாசன், தமிழ்வேந்தன், கிரிஜா, சிவலிங்கம், ஜெகதீசன், சீனிவாசன், சம்பத், சுப்பிரமணியன், செல்வி, ஆகியோருக்கு பரிசுகள் வழங்கிபாராட்டினார்.
விழாவில் பேசிய மேயர் ஸ்டாலின் கூறுகையில், கடந்த மாநகராட்சி நிதி நிலை அறிக்கையில் சிறந்த வார்டுகளுக்கு பரிசு வழங்கப்பட்டும் என்றுஅறிவிக்கப்பட்டு இருந்தது.
குப்பை அகற்றுதல், மழைநீர் கால்வாய் அமைத்தல், தூர்வாருதல், நடைபாதைகளை சீர் அமைத்தல், பழுதான சாலைகளை சரி செய்தல் உள்ளிட்ட பணிகளைசிறப்பாக செய்யும் வார்டுகளுக்கு பரிசளிக்க தேர்வுக்குழு அமைக்கப்பட்டது.
அந்தக்குழு தேர்வு செய்த வார்டுகளுக்கு இப்பொழுது பரிசுகள் வழங்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு வார்டுகளும் போட்டி போட்டு இந்த பரிசை பெற,வரும் காலங்களில் முயற்சி செய்ய வேண்டும். என்றார்.
முன்னதாக, பரிசு பெற்ற வார்டுகளின் துப்புரவு ஆய்வாளர்களுக்கும், சிறந்த துப்புரவு தொழிலாளர்களுக்கும் மேயர் ஸ்டாலின் பரிசுகள் வழங்கினார்.மாநகராட்சி ஊழியர்களுக்கு மழை கோட்டுகளும் வழங்கப்பட்டன.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications