காளிமுத்துவுக்கு இதய அறுவை சிகிச்சை
சென்னை:
அ.தி.மு.க.அவைத் தலைவர் காளிமுத்துவுக்கு இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
காளிமுத்து கடந்த 10 ம் தேதி இரவு சென்னை பெரியார் திடலில் திராவிடர் கழகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டபொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். கூட்டம் முடிந்ததும் ஒரு ஹோட்டலுக்குச் சென்று ஓய்வெடுத்தார்.அங்கு அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. ரத்த வாந்தியும் எடுத்தார்.
உடனடியாக அவர் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். டாக்டர்கள் பரிசோதனை செய்தபோது இருதயத்தின் இடதுபுற அறைகளில் உள்ள தமனிகளில் 4 இடங்களில் அடைப்பு ஏற்பட்டு இருந்ததைக்கண்டுபிடித்தனர். இதையடுத்து காளிமுத்துவுக்கு சர்க்கரைநோய்க்கும், ரத்தவாந்திக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்த நிலையில், வியாழக்கிழமை காலை 9 மணிக்கு டாக்டர் கிரிநாத் தலைமையில் டாக்டர்கள் காளிமுத்துவுக்குஇருதய அறுவை சிகிச்சை செய்தனர்.
அறுவை சிகிச்சை முடிந்தபின் அவருடைய இதயத் துடிப்பும், ரத்த ஓட்டமும் சீராக இருப்பதாக டாக்டர்கள்அறிவித்தனர். தற்போது அவர் 24 மணி நேரத்துக்கு மயக்க நிலையில் வைக்கப்பட்டுள்ளார்.
முன்னதாக, புதன்கிழமை இரவு அ.தி.மு.க.பொதுச்செயலாளர் ஜெயலலிதா தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு காளிமுத்துவிடம் பேசினார். அப்போது ஜெயலலிதா, அவரது உடல்நலத்தை விசாரித்து விட்டு அறுவைசிகிச்சை வெற்றிகரமாக நடக்க வாழ்த்துக் கூறினார்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications