தஞ்சையில் பேரணி .. வீரமணி கைது

Subscribe to Oneindia Tamil

தஞ்சாவூர்:

அனைத்து ஜாதியினரையும் அர்ச்சகர் ஆக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தஞ்சாவூரில் மறியல் போராட்டம் நடத்த முயன்ற திராவிட கழகபொதுச் செயலாளர் கி.வீரமணி உள்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கைது வெள்ளிக்கிழமை செய்யப்பட்டனர்.

வெள்ளிக்கிழமை காலை காமராஜர் சிலை முன்பு திராவிடர் கழக தொண்டர்கள் திரளாக கூடினார்கள். அங்கு 10.45 மணிக்கு திராவிடர் கழக பொதுச்செயலாளர் கி.வீரமணி வந்தார்.

பின்னர் அனைத்து ஜாதியினரையும் அர்ச்சகர் ஆக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தொண்டர்கள் மத்தியில் உரையாற்றினார். பின்னர்அங்கிருந்து கி.வீரமணி தலைமையில் மறியல் செய்ய ஊர்வலமாக புறப்பட்டனர்.

அப்பொழுது அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீஸார் அவர்களை தடுத்து நிறுத்தி கைது செய்தனர். இதில் திராவிட கழக பொதுச்செயலாளர் கி.வீரமணிமற்றும் மாநில தொழிலாளர் அணிச் செயலாளர் ஜெயராமன், இளைஞர் அணிச்செயலாளர் ஜெயக்குமார், தஞ்சை மாவட்ட தலைவர் தங்கராசு உட்பட 400பெண்களும், ஆயிரக்கணக்கானவர்களும் கலந்து கொண்டனர். அனைவரும் கைது செய்யப்பட்டனர்.

அனைத்து ஜாதியினரையும் அர்ச்சகர் ஆக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி திராவிடர் கழகம் சார்பில் மாநிலம் தழுவிய மறியல்போராட்டம் வெள்ளிக்கிழமை நடத்தப்படும் என்று ஏற்கனவே திராவிடக் கழகம் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+