தொடரும் சிலைகள் உடைப்பு .. பதட்டத்தில் நெல்லை
திருநெல்வேலி:
திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையத்தில் பல கோயில் சிலைகள்உடைக்கப்பட்டன. அந்த பதட்டம் தணியும் மீண்டும் வெள்ளிக்கிழமையும் கோயில்சிலைகள் உடைக்கப்பட்டுள்ளன.
சென்ற வாரம் திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையத்தில் 4 கோயில்களில்கோயிலின் சுற்றுச்சுவர்கள் உடைக்கப்பட்டு கோயிலில் இருந்த சிலைகள், பீடங்கள்உடைக்கப்பட்டன.
இந்த சம்பவம் நடந்த இரு நாட்கள் கழித்து ஈரோடு மாவட்டம் தாராபுரத்திலும்கோயில் சிலைகள் உடைக்கப்பட்டன. இந்த சம்பவம் தமிழகம் முழுவதையும் அதிர்ச்சிஅடைய வைத்தது. இந்த சம்பவம் காரணமாக அந்த பகுதிகளில் பரபரப்பு ஏற்பட்டது.
புதன்கிழமை மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், தமிழக பாரதீய ஜனதாகட்சித் தலைவர் கிருபாநிதி உட்பட பல தலைவர்கள் நெல்லையில் சிலைகள்உடைக்கப்பட்ட கோயில்களை பார்வையிட்டனர். இந்த சம்பவத்தில்ஈடுபட்டவர்களை கைது செய்யாவிட்டால் கடையடைப்பு நடத்தப்படும் எனஅறிவித்தனர்.
இதன் படி இந்து முன்னணி அமைப்பினர் உண்ணாவிரதப் போராட்டத்தில்ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் கலந்து கொண்டு பேசுவோருக்கு மைக்,ஒலிபெருக்கி போன்றவற்றை உபயோகிக்க போலீசார் அனுமதி மறுத்தனர்.
போலீசாரின் இந்த போக்கை கண்டித்தும், சிலை உடைப்பில் ஈடுபட்டவர்களை கைதுசெய்யக் கோரியும் நெல்லை மாவட்டத்தில் இந்து முன்னணியினர். கடையடைப்பிற்குஅழைப்பு விடுத்திருந்தனர்.இந்த கடையடைப்பு வெள்ளிக்கிழமை நடந்தது.
இந்த அழைப்பிற்கு ஒரளவு மட்டுமே ஆதரவு காணப்பட்டது. இந்நிலையில்மேலப்பாளையத்தில் வெள்ளிக்கிழமை இரவு பிள்ளையார் சிலை உடைக்கப்பட்டது.
மேலப்பாளையம் மேத்தமார்பாளையம் செக்கடி தெருவில் இருக்கும் பிள்ளையார்சிலையின் இடுப்பு பகுதி உடைக்கப்பட்டு சிலையும் கீழே தள்ளப்பட்டிருந்தது.இதனால் அந்த பகுதியில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டது.
சிலை உடைப்பால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் பஸ்கள் மீது கல் வீசி தாக்குதல்நடத்தினர். இதனால் இரண்டு பஸ்களின் கண்ணாடிகள் சேதமடைந்தன. போலீசார்விரைந்து வந்து மக்களை சமாதானப்படுத்தினர்.
இந்நிலையில் வெள்ளிக்கிழமை சிலை உடைப்பில் சம்பநத்தபட்டதற்காக இருவரைபோலீசார் கைது செய்தனர். முந்தைய சிலை உடைப்பு சம்பவத்திற்கும், இவர்களுக்கும்தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தில் போலீசார் இவர்களிடம் தீவிர விசாரணைநடத்தி வருகிறார்கள்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications