மருமகள் கொலை, பேரனுக்கு அடி .. பெண் தலைமறைவு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

மருமகள் மீது ஏற்பட்ட கோபத்தால் மருமகளை இரும்பு கம்பியால் தாக்கி கொன்றமாமியாரை போலீசார் தேடி வருகின்றனர்.

சென்னை துறைமுகத்தில் மஸ்தூர் வேலை செய்து வருபவர் சேவியர் (36). இவரதுமனைவி கிரேஸ் ஹெலன் (34). இவர்கள் இருவரும் காதலித்து கலப்பு திருமணம்செய்து கொண்டவர்கள். இவர்களுக்கு ஜெயராஜ் என்ற 6 வயது மகனும் உண்டு.

இவர்கள் சென்னை பதுவண்ணாரப்பேட்டையில் இருக்கும் துறைமுக தொழிலாளர்குடியிருப்பில் வசித்து வந்தனர். ஹெலன் வேறு ஜாதியை சேர்ந்தவர் என்பதால்சேவியரின் தாய் வெள்ளைத்தாய்க்கு (56) மருமகள் மீது வெறுப்பு இருந்து வந்தது.அவர் மகன் வீட்டிற்கு வரும்போதெல்லாம் மாமியாருக்கும் மருமகளுக்கும் சண்டைநடப்பது வழக்கம்.

கிறிஸ்துமஸ் பண்டிகையை மகன் வீட்டில் கொண்டாடுவதற்காக சென்னை வந்தார்வெள்ளைத்தாய். திங்கள்கிழமை முதல் மாமியார் மருமகள் சண்டை மீண்டும்துவங்கியது. அன்று முதல் தினமும் இருவருக்கும் சண்டை இருந்து வந்தது. இது பற்றிதன் கணவரிடம் கூறினார். ஹெலன். ஆனால் இதை கண்டும் காணாமல்விட்டுவிட்டார்.

இந்நிலையில் வியாழக்கிழமை இரவு சேவியர் வேலைக்கு சென்ற பின்புமாமியாருக்கும் மருமகளுக்கும் சண்டை என்றுமில்லாத அளவு உச்சகட்டத்தைஅடைந்தது.

மருமகள் மீது பெரும் ஆத்திரம் கொண்ட வெள்ளைத்தாய் வீட்டிலிருந்த பலமானஇரும்புக் கம்பியால் மருமகள் தலைமீது ஓங்கி ஒரு போடு போட்டார். ஹெலன்வலியால் துடிதுடித்து அலறியபடியே கீழே விழுந்தார்.

ஜெயராஜ் ஓடிவந்து தாயின் நிலை பார்த்து அழுதான். அவனுக்கும் இரும்பு கம்பியால்அடி விழுந்தது. மீண்டும் மருமகளை அடிக்க திரும்பினார் வெள்ளைத்தாய். கீழே ரத்தம்குபு குபுவென பொங்கிய நிலையில் தலை பிளந்து இறந்து கிடந்தார் ஹெலன்.

நிலைமையின் விபரீதம் புரிந்ததும் அங்கிருந்து ஓடினார் வெள்ளைத்தாய். அவர்ஓடுவதை பார்த்த அருகிலிருந்த வீட்டுக்காரர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

இரும்பு கம்பியால் அடிவாங்கிய சிறுவன் ஜெயராஜுக்கு மருத்துவமனையில் சிகிச்சைஅளிக்கப்பட்டு வருகிறது. தலைமறைவான வெள்ளைத்தாயை போலீசார் தேடிவருகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+