பயிற்சியாளராக இருக்கவே லாயக்கில்லாதவர் கெய்க்வாட் .. பிரிஜேஷ்
பெங்களூர்:
இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக இருக்கவே லாயக்கில்லாதவர் அன்ஷுமன் கெய்க்வாட் என்றுகுற்றம் சாட்டியுள்ளார் கர்நாடக கிரிக்கெட் சங்க செயலாளர் பிரிஜேஷ் படேல்.
1999-ம் ஆண்டு நடந்த உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டியின்போது இந்திய கிரிக்கெட் அணியின்மேலாளராக பிரிஜேஷ் படேலை நியமித்ததுதான், தான் செய்த மிகப் பெரிய தவறு என்று கெய்க்வாட் சமீபத்தில்கூறியிருந்தார்.
இதற்கு படேல் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பெங்களூரில் படேல் கூறுகையில், என்னைமேலாளராக நியமிக்க இவர் யார்?. கிரிக்கெட் வாரியம்தான் என்னை நியமித்தது. கெய்க்வாட் அல்ல.
உலகக் கோப்பைப் போட்டியின்போது, இந்திய அணியின் செயல்பாடுகளில் நான் தலையிடவே இல்லை. இதைஅணி வீரர்களிடம் கேட்டுப் பார்த்தாலே தெரியும். உண்மையில், நான் அங்கு இருந்ததால்தான், கெய்க்வாட்டின்திறமையின்மை குறித்து எனக்குத் தெரிய வந்தது. இதை வாரியத்திற்கு அளித்த அறிக்கையிலும் தெளிவாககுறிப்பிட்டிருந்தேன்.
கடந்த 3 ஆண்டுகளில் இவர் அணிக்கு என்ன செய்து விட்டார்.? இவரிடமிருந்து பந்துவீச்சாளர்களோ அல்லதுபேட்ஸ்மென்களோ எதையாவது கற்றுக் கொள்ள முடிந்ததா? அவரிடம் திட்டமே கிடையாது. அணி வீரர்களுடன்சரியாகப் பேசுவது கூட கிடையாது.
இந்திய அணி 50 எக்ஸ்ட்ரா ரன்களும், மூன்று ஓவர்கள் குறைவாகப் போட்டதற்கும் நானா பொறுப்பு?
டெண்டுல்கர், மோங்கியா, ராகுல் டிராவிட் ஆகியோருடன் பேசும்போது அவர் மராத்தியில்தான் பேசுவார்.ஆனால் கர்நாடகத்தைச் சேர்ந்த வீரர்களுடன் நான் கன்னடத்தில் பேசினால் மட்டும் ஆட்சேபிப்பார்.
இந்திய அணிக்கு கொஞ்சம் கூட தேவையில்லாதவர்கள் கெய்க்வாட்டும், ரவீந்திர சத்தாவும். இவர்களதுதிறமையின்மை குறித்து கிரிக்கெட் வாரியத்திற்கு நான் கொடுத்த அறிக்கையில் மிகத் தெளிவாகவேகூறியிருக்கிறேன் என்றார் படேல்.
படேல் மீது கெய்க்வாட் திடீரென இப்படி விஷம் கக்கியதற்கான காரணம் சரியாகத் தெரியவில்லை. இருப்பினும்,பெங்களூரில் உள்ள தேசிய கிரிக்கெட் பயிற்சி அகாதமியின் இயக்குநர் ஹனுமந்த் சிங் பதவி விலகியுள்ளார்.அந்தப் பதவியை அடைய கெய்க்வாட் குறிவைத்திருப்பதாகத் தெரிகிறது. ஆனால் அந்தப் பொறுப்பில் படேல்நியமிக்கப்படலாம் என்ற பேச்சு அடிபடுகிறது. இதையடுத்தே படேல் மீது கெய்க்வாட் திடீரென பாய்ந்திருக்கிறார்என்று கூறப்படுகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications