நாங்கள் தொல்லையில்லாத கட்சி .. கூறுகிறார் ராமதாஸ்
திருவள்ளூர்:
தேசிய ஜனநாகக் கூட்டணியிலேயே தொல்லை தராத கட்சி பாட்டாளி மக்கள்கட்சிதான் என்று அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் கூறினார்.
திருத்தணி அருகே உள்ள ஆர்.ஆர். பேட்டையில் பா.ம.க.வின் 226-வது தொகுதிமாநாடு நடந்தது. இதில் கலந்து கொண்டு பேசுகையில், தமிழகத்தில் இன்னும் 8தொகுதிகளில் மட்டும் மாநாடு நடத்தப்பட வேண்டும்.
பா.ம.க,வை,. வன்னியர் கட்சி என கூறி வந்தனர். ஆனால் இந்த கட்சி கூட்டத்திற்குதென் மாவட்டங்களிலும் ஆதரவு இருக்கிறது. பொதுகூட்டத்தில் ஏராளமானபெண்களும் வந்து கலந்து கொண்டனர்.
தமிழகத்தை தி.மு.க., அ.தி.மு.க., காங்கிரஸ் கட்சிகள் ஆண்டுவிட்டன. ஆனால் எந்தவித முன்னேற்றமும் இல்லை. இன்னும் 60 கட்சிகள் தோன்றிாலும் மக்கள்பா.ம.க.வைத்தான் வரவேற்கிறார்கள்.
பா.ம.க ஆதரவால்தான் டெல்லியில் ஆட்சி 7 மாதம் நீடித்தது. எந்த விதமானதொந்தரவும் தராத கட்சி பா.ம.க. என பிரதமர் பாராட்டியுள்ளார்.
பா.ம.க. இருந்த கூட்டணியில்தான் வந்து இணைந்தது தி.மு.க. தேசிய ஜனநாயககூட்டணியில் பா.ம.க. இருக்கிறது. யாரை ஆதரித்தாலும், எதிர்த்தாலும் நாங்கள்கூட்டணியில் தொடர்ந்த நீடிப்போம்.
வரும் 2006-ம் ஆண்டு தமிழகதிதல் பா.ம.க. ஆட்சி அமைக்கும். இன்னும் 90நாட்களில் பாண்டிச்சேரியில் வன்னியர் ஒருவர் முதல்வராக வருவார், எல்லாஜாதியைச் சேர்ந்தவர்களும் முதல்வராக வந்து விட்டனர்.
பாண்டிச்சேரியில் 100-க்கு 60 சதவிகிதம் பேர் வன்னியர்கள். பெரும்பான்மையினர்ஆள வேண்டும். சிறுபான்மையினர் பாதுகாக்கப்பட வேண்டும் என்பது தான்ஜனநாயகம்.
இங்கு விவசாயிகள் நிலை மிகவும் மோசமாக உள்ளது. அவர்கள் வாழ்வா சாவா எனபோராடி வருகின்றனர்,
நெல் விலை ஏறவில்லை ஆனால் பூச்சி மருந்து, டிராக்டர், உரம் போன்றவற்றின் விலைஏறிவிட்டது. விவசாயிகள் கடன்காரர்களாகி விட்டார்கள்.
நம் பெயரைச் சொல்லி அரசு கடன் வாங்குகிறது. விவசாயி கடனை கட்டாவிட்டால்அவர்கள் வீட்டை அரசு ஜப்தி செய்கிறது. கரும்பு விலையை உயர்த்தச் சொன்னால்அதை பிழிந்து அதன் பிறகு மத்தியில் விலை நிர்ணயம் என கூறுகின்றனர்.
நெசவு தொழிலும் இங்கு நலிந்து விட்டது. துணியை யாரும் வாங்குவதில்லை .ஆனால் அயல்நாடுகளில் பவானி ஜமக்காளம்தான் விற்பனையாகிறது என்றார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications