எம்.பி. நிதியை அதிகரிக்கக் கோருகிறார் வைகோ
கோவில்பட்டி:
தொகுதி வளர்ச்சி நிதியாக எம்.பிக்களுக்குக் கொடுக்கப்படும் நிதியை ரூ. 4 கோடியாக அதிகரிக்க நாடாளுமன்றத்தில் வலியுறுத்தியதாகம.தி.மு.க.பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்தார்.
கோவில்பட்டி நகர கூட்டுற வங்கியின் புதிய கட்டிடத்தை திறந்து வைத்து அவர் பேசியதாவது:
கோவில்பட்டியின் வளர்ச்சிக்காக 3 ரயில்வே மேம்பாலங்கள் கட்டுவதற்கான பணிகள் நடந்து வருகின்றன. ரயில்வே மேம்பாலங்கள்கட்டுவதற்கான முழு நிதியும் ஒதுக்கப்பட்டு விட்டதாக மத்திய ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்தார். அதுதவிர ரயில் மேம்பாலங்கள்கட்டுவதற்கான ஆரம்பகட்ட பணிகள் தொடங்கிவிட்டதாக தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் கிருட்டினன் தெரிவித்துள்ளார்.
எம்.பி.தொகுதி வளர்ச்சி நிதியை ரூ 4 கோடியாக உயர்த்த நாடாளுமன்றத்தில் சபாநாயர் பாலயோகியிடம் ஆலோசனை கூறியுள்ளேன் என்றார் வைகோ.விழா கோவில்பட்டி நகர கூட்டுறவுத் துறை வங்கி தலைவர் ரமேஷ் தலைமையில் நடந்தது.












Click it and Unblock the Notifications