எங்கள் கட்சி ஜாதிக்கட்சியல்ல... கண்ணப்பன்
சென்னை:
மக்கள் தமிழ் தேசம் கட்சி ஜாதி கட்சியல்ல என அக் கட்சியின் தலைவர் கண்ணப்பன் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் சென்னையில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குமரி அனந்தனின் பொது வாழ்வில் பொன் விழா கூட்டத்தில் தமிழக முதல்வர்கலந்து கொள்ளவிருக்கிறார்.
குமரி அனந்தனின் அழைப்பிதழில் கட்சி எல்லை கடந்து மனித நேயம் வளர்ப்போம் எனகுறிப்பிடப்பட்டிருப்பதால் நானும் இந்த விழாவில் கலந்து கொள்ளவிருக்கிறேன்.
எங்கள் கட்சியை ஜாதிக்கட்சி என கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் நல்லகண்ணு குறிப்பிட்டுள்ளார். அது எங்கள்இயக்கத்துக்கு பொறுத்தமானது அல்ல. ஏனென்றால் எங்கள் கட்சியில் அனைத்து சமுதாயத்தைச் சேர்ந்தவர்களும்இடம் பெற்றுள்ளனர்.
என் தலைமையில் மூன்றாவது அணி அமைய வேண்டும் என சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம் சிங் யாதவ்கூறியது அவரது சொந்த கருத்து. ஜனவரி மாதம் முதல் வாரத்தில் தினமும் 3 சட்டசபை தொகுதிகளில் கொடியேற்றுவிழாவும் பொதுக் கூட்டங்களும் நடத்தவிருக்கிறோம்.
பிப்ரவரி மாதம் முதல் வாரத்தில் கட்சியின் பொதுக்குழு கூட்டம் நடக்கிறது. பாண்டிச்சேரியில் பிப்ரவரி மாதத்தின்மத்தியில் மாநில மாநாடு நடக்கவிருக்கிறது. 14 தொகுதிகளில் வெற்றியை நிர்ணயிக்கும் கட்சியாக மக்கள் தமிழ்தேசிய கட்சி இருக்கிறது. அந்த 14 தொகுதிகளில் 7 தொகுதிகளில் எங்கள் கட்சி தனித்து வெற்றி பெறும் எனகூறினார்.


Click it and Unblock the Notifications
