நெட் இணைப்புக் கொடுக்க களமிறங்குகிறது பாரத் சஞ்சார் நிகாம்
கோவை:
இன்டர்நெட் இணைப்புக் கொடுக்க களத்தில் இறங்கிறது பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் இந்த இணைப்பு முதல்முறையாக கோவையில் துவக்கி வைக்கப்பட்டது.
தமிழகம் முழுவதும் பல்வேறு இன்டெர்நெட் இணைப்பு வழங்கும் நிறுவனங்கள் போட்டா போட்டியில்இறங்கியுள்ளன. விஎஸ்என்எல், டிஷ்நெட், சத்யம் ஆகியவை இந்த இணைப்புகளை வழங்கி வருகிறது.விஎஸ்என்எல் நிறுவனத்துடன் இணைந்து பிஎஸ்என்எல்ம் இப்போது இணைப்புக் கொடுக்க முடிவு செய்துள்ளது.பாரத் சஞ்சார் நகாம் லிமிடெட் எனப்படும் இந்திய தொலைத் தொடர்புத் துறை, கோவையில் இன்டர்நெட்இணைப்பு வழங்க முடிவு செய்துள்ளது.
புத்தாண்டு முதல் இது அமலுக்கு வருகிறது. இதற்கான துவக்க விழா கோவையில் நடந்தது இந்த விழாவில்தமிழ்நாடு வட்ட தன்மை பொது மேலாளர் முகமது யாசீன் பேசியதாவது:
கோவையில் இதுவரை விஎஸ்என்எல் இணைப்பை பெறவும், பாஸ்வேர்ட், புதுப்பித்தல் ஆகியவற்றிற்காகவும்சென்னைக்கு மனுச் செய்ய வேண்டிய கட்டாயம் இருந்தது. ஆனால், இப்போது கோவையிலேயே இந்தஇணைப்பை பெற முடியும். இதற்காக ரூ. 50 லட்ச ரூபாயில் புதிய கருவி நிறுவப்பட்டுள்ளது.
சென்னையைத் தவிர தமிழகத்தில் 15000 இன்டர்நெட் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த இணைப்புகளில்5000 இணைப்புகள் கோவையில் வழங்கப்பட்டுள்ளன.
கோவை, மதுரை ஆகிய நகரங்களில் அரசு செல்போன் வரும் பிப்ரவரி மாத இறுதியில் வழங்கப்படும். முதலில்1000 இணைப்புகள் சோதனை அடிப்படையில் வழங்கப்படும். பின்னர் இது விரிவுபடுத்தப்படும்.
தமிழகத்தில் நடப்பாண்டில் இரண்டரை லட்சம் டெலிபோன் இணைப்புகள் வழங்க கருவிகள் நிறுவப்பட்டன.தற்போது 1.91 லட்சம் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. கடந்த ஓராண்டில் 57 டெலிபோன் எக்சேஞ்சுகள்நிறுவப்பட்டன என்றார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications