நிபந்தனையற்ற பேச்சுவார்த்தைக்குப் புலிகள் தயாராகுமா?
கொழும்பு:
இலங்கை இனப்பிரச்சனைக்குத் தீர்வு காண, விடுதலைப்புலிகள் நிபந்தனையற்ற அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தமுன்வந்தால் அதை இலங்கை அரசு வரவேற்கும் என்று இலங்கை பாதுகாப்பு அமைச்சர் அனுராதா ரத்வத்தேசெவ்வாய்க்கிழமை கூறினார்.
அதுதவிர, சண்டை நடக்கும் இடத்தில் ராணுவ வீரர்களை வாபஸ் பெறுவது குறித்தும் இலங்கை அரசு முயற்சிமேற்கொள்ளும் என்றார்.
தலைநகர் கொழும்பில் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
இலங்கையில் இனப்பிரச்சனையை முடிவுக்குக் கொண்டு வரும் வகையில் சண்டைநிறுத்தத்தைஅறிவித்துள்ளார்கள் விடுதலைப்புலிகள். ஆனால் கடந்த காலங்களில் இதே போன்று ஆயுத பலங்கள்குறைந்திருக்கும் போது மட்டுமே புலிகள் சண்டைநிறுத்தம் அறிவிப்பார்கள். இதனால் இலங்கை அரசுக்குஏமாற்றமே மிஞ்சியது. கடந்த காலங்களில் ஏற்பட்ட அனுபவங்களால் புலிகளின் சண்டைநிறுத்தத்திற்குபின்னணியில் உள்ள விஷயங்களை ஆராய்ந்து வருகிறது இலங்கை அரசு.
மேலும் சண்டைநிறுத்தம் அறிவித்துள்ள புலிகள் எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி அமைதிப் பேச்சுவார்த்தைக்குத்தயாராக வேண்டும். அப்போதுதான் இலங்கை அரசும் சண்டை நிறுத்தத்தை ஆதரிப்பது குறித்து ஆலோசிக்கும்.
யாழ்ப்பாணத்தில் உள்ள ராணுவ வீரர்கள், புலிகளுடன் சண்டை போடுவது இலங்கையிலுள்ள பெரும்பான்மைமக்களின் உரிமையை நிலை நாட்டுவதற்காகத்தான். புலிகள் ஆக்கிரமித்துள்ள இடங்களை இலங்கை ராணுவவீரர்கள் சண்டையிட்டு கைப்பற்றிக் கொண்டு வருகிறார்கள்.
இலங்கையில் வாழும் பெரும்பான்மை மக்களின் உரிமையை நிலைநாட்டும் வகையில் ராணுவ வீரர்கள்சண்டையிட்டு வருகிறார்கள் என்றார்.
இலங்கை சட்டத்துறை அமைச்சர் பெரிஸ் கூறுகையில், விடுதலைப்புலிகள் நிபந்தனையற்ற பேச்சு வார்த்தைக்குதயார் என்றால் மட்டுமே இலங்கை அரசு அமைதிப் பேச்சுவார்த்தையைத் தொடங்கும் ஆயத்தங்களில் இறங்கும்.பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கும் போது சண்டைநிறுத்தம் என்ற பேச்சுக்கே இடமில்லை. பேச்சுவார்த்தைகுறித்த ஒப்பந்தம் கையெழுத்தான பின் சண்டைநிறுத்தம் குறித்து ஆலோசிக்கப்படும் என்றார்.
யு.என்.ஐ.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications