தலைநகரில் பவர் கட்
டெல்லி:
டெல்லியில் உள்ள மின்சார விநியோக நிலையத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக டெல்லி முழுவதும் செவ்வாய்க்கிழமை மின்சாரம் தடைபட்டது.
பிரதமர் வாஜ்பாயின் அலுவலகத்திலும் மின்சாரம் தடைபட்டது. இதையடுத்து மின்சார விநியோகத்திற்காக மாற்று நடவடிக்கைகள்மேற்கொள்ளப்பட்டது.
மின்சாரம் இல்லாததால் மோட்டார் வைத்திருக்கும் வீடுகள் பெரிதும் பாதிக்கப்பட்டன. ரயில்வே இலாகாவும் கடுமையாகப் பாதிக்கப்பட்டது.பிற்பகல் 2 மணி வரை டெல்லியின் பல பகுதிகளில் மின்சாரம் இல்லை. இதனால் டெல்லி முழுவதும் இருட்டில் மூழ்கியிருந்தது.
மின்சாரம் விநியோகம் செய்யும் நிலையத்தில் ஏற்பட்ட திடீர் கோளாறு காரணமாக ஒட்டுமொத்த மின் விநியோகமும் தடைபட்டது.
தலைநகர் டெல்லியிலிருந்தே ஹரியனா, பஞ்சாப், உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கு மின்சாரம் விநியோகம் செய்யப்படுவதால் அந்த மாநிலங்களுக்கும்மின் விநியோகம் செய்வதில் தேக்கம் ஏற்பட்டது.
தினமும் டெல்லிக்கு 2,600 மெகா வாட் மின்சக்தி தேவைப்படுகிறது. நான்கு மின் உற்பத்தி நிலையங்களிலும் மின்சார விநியோகம் செய்யப்பட்டு வந்தாலும்500 மெகா வாட் மின்சாரம் அதிகமாகத் தேவைப்படுகிறது. இதனால் மின் விநியோகத்தில் பற்றாக்குறையே ஏற்பட்டு வருகிறது.
பற்றாக்குறையை ஈடு செய்ய பாதர்பூர் மின் உற்பத்தி நிலையத்திலிருந்து மின்சாரம் விநியோகம் செய்யப்படுகிறது. இருப்பினும் கடந்த ஒரு வாரமாக மின்விநியோகத்தில் தேக்க நிலையே நீடித்து வருகிறது. ஜனவரி 3 ம் தேதிக்குப் பிறகு மின் விநியோகத்தில் பிரச்சனை இருக்காது என்று டெல்லி மின்துறைஅமைச்சர் நரேந்திர நாத் கூறியுள்ளார்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications