பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் விற்பனை குறைந்தது
மும்பை:
பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் விற்பனை டிசம்பர் 2000-ன் போது 45 சதவிகிதம் குறைந்துள்ளது.
பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் விற்பனை 1999-ம் ஆண்டை விட குறைந்துள்ளது. 1999-ம் ஆண்டு 1,32,000யுனிட் அளவிற்கு இருந்த விற்பனை 2000 மாவது ஆண்டில் 73,000 யுனிட் என்ற அளவிற்கு குறைந்துள்ளது.
இந்தியாவின் புகழ் பெற்ற இரு சக்கர மூன்று சக்கர வாகனத்தின் விற்பனையும் 2000 மாவது ஆண்டில் 7 சதவிகிதம்குறைந்துளளது.
இதே சமயம் இந்தியாவின் புகழ் பெற்ற மோட்டார் சைக்கிள் விற்பனை நிறுவனமான ஹீரோ ஹோண்டாவின்விற்பனை டிசம்பர் 2000 மாவது ஆண்டில் 25.5 சதவிகிதம் அதிகரித்துள்ளது.
2000 மாவது ஆண்டு ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் அதன் விற்பனை 40.6 சதவிகிதம்அதிகரித்துள்ளது. 2000 மாவது ஆண்டில் இந்நிறுவனத்தின் விற்பனை 1999-ம் ஆண்டை விட 85.000 யுனிட்அதிகமாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications