சண்டை நிறுத்தத்திற்குத் தயாராகிறது இலங்கை அரசு
கொழும்பு:
இலங்கை இனப்பிரச்சனைக்குத் தீர்வு காணும் வகையில் சண்டைநிறுத்தம் செய்யத் தயாராக இருக்கிறோம். ஆனால்அதே நேரம் புலிகள் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்று இலங்கை அதிபர் சந்திரிகாகுமாரதுங்கா தெரிவித்துள்ளார்.
இலங்கை இனப்பிரச்சனைக்குத் தீர்வு காணும் வகையில் கடந்த டிசம்பர் மாதம் 24 ம் தேதி முதல் விடுதலைப்புலிகள்ஒரு தரப்பு சண்டை நிறுத்தம் செய்து வருகின்றனர். ஆனால் அரசு இதை நிராகரித்து விட்டது.
இந்த நிலையில் நார்வே தூதுக்குழுவினர் இலங்கை தலைநகர் கொழும்பில் முகாமிட்டுள்ளனர். அவர்கள்இலங்கையில் அரசுக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையே சமரசத்தை ஏற்படுத்தும் முயற்சியில் தீவிரமாகஇறங்கியுள்ளனர்.
இந்த நிலையில் அதிபர் சந்திரிகா கொழும்பில் நிருபர்களிடம் கூறியதாவது:
இலங்கை இனப்பிரச்சனைக்குத் தீர்வு காண, இலங்கை அரசு எவ்வித நடவடிக்கையை வேண்டுமானாலும் எடுக்கத்தயாராக இருக்கிறது. தேவைப்பட்டால் சண்டைநிறுத்தம் செய்யவும் இலங்கை அரசு தயார். ஆனால்விடுதலைப்புலிகள் அமைதிப் பேச்சுவார்த்தைக்குச் சம்மதித்தால் மட்டுமே சண்டை நிறுத்தம் அறிவிக்கப்படும்.
சண்டைநிறுத்தத்தால் தற்காலிக அமைதியே ஏற்படும். ஆனால் நிரந்தர அமைதியை ஏற்படுத்த வேண்டும் என்றகுறிக்கோளில் இலங்கை அரசு தீவிரமாக உள்ளது. கடந்த 7 ஆண்டுகளாக பல முறை சண்டைநிறுத்தம் செய்தோம்.இருப்பினும் இனப்பிரச்சனைக்கு அமைதித் தீர்வு கிடைக்கவில்லை.
கடந்த 94-95 ம் ஆண்டில் அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த வந்த புலிகள், நிரந்தர தீர்வு காண்பதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. இதனால் அரசுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இதனால் இம்முறை நிரந்தர தீர்வு காண புலிகள்ஒத்துழைக்க வேண்டும். இதற்கு இலங்கையில் வாழும் தமிழர்கள், புலிகளுக்குப் புரியும் வகையில் எடுத்துக் கூறவேண்டும் என்றார்.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications