Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இந்தியர்களை மிரட்டிய பிஜி இனத்தவருக்குச் சிறை

Subscribe to Oneindia Tamil

சுவா:

பிஜியில் நைடாசிரி மாவட்டத்தில் உள்ள மியுனாய்வேனி பகுதியில் வசித்து வந்த இரண்டு இந்தியக் குடும்பங்களை மிரட்டிய இரண்டு பிஜி இனத்தவருக்கு 18மாதங்கள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

தண்டனை பெற்றவர்கள் பெயர் வைசியா டிகோனிடோபா (21). டிமோசி மொரோகா (29). இவர்கள் இரண்டு பேரும் சேர்ந்து கொண்டுமியனாய்வேனியில் வசித்து வந்த இந்தியர் ஷெர் நாராயணன் என்பவர் வீட்டுக்குச் சென்று பணம் கொடுக்கும்படி மிரட்டியிருக்கிறார்கள். மேலும்போலீஸாருக்குத் தகவல் கொடுத்தால் வீட்டை எரித்து விடுவோம் என்றும் மிரட்டினார்களாம்.

நாராயணன் குடும்பத்தார் லகோட்டாவில் அகதிகளாக இருந்து விட்டு அப்போதுதான் தங்களது சொந்த ஊரான மியுனாய்வேனிக்கு வந்திருந்தார்கள்.

இது குறித்துப் போலீஸார் கூறுகையில், குற்றவாளிகள் இரண்டு பேரும் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 7 மணிக்கு நாராயணனின் வீட்டிற்கு வந்தனர்.வீட்டில் இருந்த நாராயணனின் மனைவியை மிரட்டி 20 டாலர்களைப் பறித்தனர். மேலும் இந்த விஷயம் குறித்துப் போலீஸாருக்குத் தகவல் கொடுத்தால்நாங்கள் உங்கள் வீட்டை தீ வைத்துக் கொளுத்தி விடுவோம் என்று மிரட்டினார்கள்.

இருப்பினும் நாராயணனின் குடும்பத்தார் போலீஸாரிடம் தகவல் கொடுத்தனர். இதே போல் இன்னொரு இந்தியக் குடும்பத்தையும் இவர்கள்மிரட்டியிருக்கிறார்கள் என்றனர். இவ்வழக்கு மாஜிஸ்ட்ரேட் ஆம்னி ரோடோடினாவகி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த அவர் தனது தீர்ப்பில், பிஜியில் கலகக்கும்பலால் ஏற்பட்ட புரட்சியையடுத்து இங்கு வாழும் இந்திய மக்கள் துன்புறுத்தப்பட்டுவருகிறார்கள். இது பொறுத்துக் கொள்ள முடியாத விஷயமாகும்.

மேலும் பலவந்தமாக இந்தியர்கள் வசிக்கும் வீடுகளுக்குள் நுழைந்து அவர்களை மிரட்டிப் பணம் பறிப்பது என்பது கொடூரமான செயல்களாகும்.இதுபோன்ற குற்றங்களை நீடிக்க விடக் கூடாது. குற்றத்தில் ஈடுபட்ட மொராக்கோவுக்கும், வைசியாவுக்கும் 18 மாதங்கள் சிறைத்தண்டனைவழங்கப்படும்.

முன்னதாக, கலகக் கும்பலால் துன்புறுத்தப்பட்ட இந்திய மக்கள் பலர் லடோகாவில் உள்ள முகாமுக்குச் சென்று அகதிகளாக வாழ்ந்து வந்தனர். பிஜியில்அவர்களது வீட்டில் உள்ள பொருகள், பணம், உடைமைகள் கலகக்கும்பலால் கொள்ளையடிக்கப்பட்டன. இங்கு வாழும் இந்தியர்கள் போதுமானஅளவிற்குக் கொடுமைப்படுத்தப்பட்டு விட்டன. இவர்களின் மறுவாழ்விற்காக பிஜி அரசு நலத்திட்டங்களைை அறிமுகப்படுத்த வேண்டும் என்று நீதிபதி தனதுதீர்ப்பில் கூறினார்.

ஐ.ஏ.என்.எஸ்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+