கொழும்பில் நார்வே தூதுக்குழுத் தலைவர்
கொழும்பு:
இலங்கை இனப்பிரச்சனைக்குத் தீர்வு காணும் விதத்தில் அதிபர் சந்திரிகா குமாரதுங்காவையும், விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனையும் சந்தித்துப்பேசுவதற்காக நார்வே தூதுக்குழுத் தலைவர் எரிக் சோல்ஹெம் புதன்கிழமை கொழும்பு வந்துள்ளார்.
கடந்த இரு தினங்களுக்கு முன்பு அதிபர் சந்திரிகா கூறுகையில், அமைதிப் பேச்சுவார்த்தை தொடங்குவதற்கு முன்பு சண்டைநிறுத்தம் என்ற பேச்சுக்கேஇடமில்லை என்று கூறினார்.
மேலும் கிறிஸ்துமஸ் தினத்தன்று புலிகள் அறிவித்திருந்த சண்டைநிறுத்தத்தையும் ஏற்க மறுத்து விட்டார் சந்திரிகா. இதையடுத்து நார்வே தூதுக்குழுத் தலைவர்எரிக் சோல்ஹெம் இரு தரப்பினரையும் சந்தித்துப் பேசுவதற்காக இலங்கை வந்துள்ளார்.
உலக நாடுகளின் வற்புறுத்தலின் பேரில் இலங்கை இனப்பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில் செயல்பட்டு வருகிறது நார்வே தூதுக்குழு. நார்வேதூதுக்குழுத் தலைவர் எரிக் சோல்ஹெம் இலங்கையில் அரசுக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையே அமைதிப் பேச்சுவார்த்தையைத் தொடங்க ஏற்பாடுசெய்து பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண முயற்சிப்பார் என்ற நம்பிக்கை எழுந்துள்ளது.
கொழும்பு வந்த நார்வே தூதுக்குழுத் தலைவர் எரிக் சோல்ஹெம்மை இலங்கையில் உள்ள தமிழர் கட்சிகள் வரவேற்றன.
முன்னதாக, செவ்வாய்க்கிழமை மாலை அதிபர் சந்திரிகா கூறுகையில், விடுதலைப் புலிகள் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு ஒப்புக் கொண்டால் நாங்கள் சண்டைநிறுத்தம் செய்யத் தயாராக இருக்கிறோம்.
வெறும் சண்டைநிறுத்தம் செய்வதால் மட்டும் பிரச்சனை தீர்ந்து விடாது. அமைதிப் பேச்சுவார்த்தை மூலம் நிரந்தரத் தீர்வு காண புலிகள் ஒத்துழைப்புகொடுக்க வேண்டும் என்று கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐ.ஏ.என்.எஸ்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications