சிறந்த மாநிலம் தமிழகம்- சிறந்த மாநகராட்சி சென்னை
சென்னை:
மக்கள் தொகை கட்டுப்படுத்திய சிறந்த மாநிலமாக தமிழகமும், சிறந்த மாநகராட்சியாக சென்னை மாநகராட்சியும் தேர்ந்தெடுக்கப்பட்டது.
இதற்கான விருதுகளை பெற அமைச்சர் ஆற்காடு வீராச்சாமியும், மேயர் ஸ்டாலினும் டெல்லிக்கு புறப்பட்டுச்சென்றனர். மக்கள் தொகையைகட்டுப்படுத்திய சிறந்த மாநிலமாக தமிழகம் தேர்வு செய்யப்பட்டது. இதற்கான விருது வழங்கும் விழா டெல்லியில் புதன்கிழமை நடக்கிறது.
இந்த விருதை பெற்றுக் கொள்வதற்காக தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் ஆற்காடு வீராச்சாமி செவ்வாய்க்கிழமை மாலை 6.40 மணிக்குவிமானம் மூலம் டெல்லிக்கு புறப்பட்டுச் சென்றார். மத்திய அமைச்சர் முரசொலி மாறனும் அதே விமானத்தில் டெல்லி சென்றார்.
இதே போன்று இந்தியாவிலேயே மக்கள் தொகையை கட்டுப்படுத்திய வகையிலும், போலியோ நோயை முற்றிலும் ஒழித்ததற்காகவும் சிறந்தமாநகராட்சியாக சென்னை மாநகராட்சி தேர்வு செய்யப்பட்டது.
இதை Population fundamental of India என்ற அமைப்பு தேர்வு செய்தது. இந்த விருதை மத்திய சுகாதாரத்துறைஅமைச்சர் டெல்லியில் புதன்கிழமை வழங்குகிறார்.
இந்த விருதை பெற்றுக் கொள்வதற்காக சென்னை மாநகர மேயர் மு.க .ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை மாலைவிமானம் மூலம் டெல்லிக்கு புறப்பட்டுச் சென்றார். அவருடன் அவரது துணைவியார் துர்கா ஸ்டாலினும் சென்றார்.
விமான நிலையத்தில் மத்திய அமைச்சர் டி.ஆர் பாலு சால்வை அணிவித்து மாறன், ஆற்காடு வீராச்சாமி, ஸ்டாலின்ஆகியோரை வழியனுப்பி வைத்தார். விமான நிலையத்தில் அமைச்சர் சமய நல்லூர் செல்வராஜ், சைதை கிட்டுஎம்.எல்.ஏ பரிதி இளம் வழுதி, எம்.பலராமன், அன்பரசன், எஸ்.ஆர் ராஜா விமான நிலையத்தில் வழியனுப்பிவைத்தனர்.
-
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ்












Click it and Unblock the Notifications