மைக்கேல் ஜாக்சனிடம் உதவி கேட்கிறார் உலகிலேயே உயரமான பெண்
இன்டியானா போலிஸ் ( அமெரிக்கா):
உலகிலேயே மிகவும் உயரமான பெண் என்ற பட்டத்தைப் பெற்ற பெண் சான்டே ஆலன், பாப் இசை பாடகர் மைக்கேல் ஜாக்சனிடம் பிசியோதெரபிமூலம் தனக்கு சிகிச்சை அளிக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்த விவரம் வருமாறு:
உலகிலேயே மிகவும் உயரமான பெண் என்ற பெருமை சான்டே ஆலனைச் சேரும். இவரது உயரம் 7 அடி 4 சென்டி மீட்டர். உலகிலேயே மிக உயரமானபெண் என்பதால் இவரது பெயர் கின்னஸ் சாதனைப் புத்தகத்திலும் இடம்பெற்றுள்ளது.
கடந்த பிப்ரவரி மாதம் ஆலன் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் நடித்துக் கொண்டிருந்த போது அவர் கீழே விழுந்து விட்டதால் காலில் உள்ள தசைகள்செயலிழந்து விட்டன. இதனால் கடந்த ஒரு வருடமாக படுத்த படுக்கையாகி விட்டார் ஆலன். அவரால் தற்போது நடக்க முடியாது. இவருக்கு வயது 45.
அவர் மிகவும் உயரமாக இருந்ததால் அவருக்கு, அவரது 21 வயதில் பிட்டியூட்டரி சுரப்பியில் சில அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டன. இதனால்அவருக்கு செயற்கை கால்களையும் பொருத்த முடியாத நிலை உள்ளது. இந்த நிலையில் பிசியோதெரபி சிகிச்சை மூலம் காலை குணப்படுத்தலாம் என்றும்,சிகிச்சைக்குப் பின் எழுந்து நடக்கலாம் என்றும் டாக்டர்கள் ஆலோசனை வழங்கியுள்ளனர்.
இதையடுத்து, பாப் இசையில் மட்டுமின்றி, பிசியோதெரபி சிகிச்சையிலும் சிறந்து விளங்கும் மைக்கேல் ஜாக்சனிடம் உதவி கேட்டிருக்கிறார் ஆலன்.அதாவது பிசியோதெரபி மூலம் தனக்கு சிகிச்சையளித்து தனது காலை குணப்படுத்தும் படி மைக்கேல் ஜாக்சனுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார் இந்தஉயரமான பெண்மணி.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications