சண்டைநிறுத்தத்தை சந்திரிகா ஏற்க வேண்டும்: வைகோ
சென்னை:
இலங்கையில் விடுதலைப்புலிகள் அறிவித்துள்ள சண்டைநிறுத்தத்தை அதிபர் சந்திரிகா ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று ம.தி.மு.க. பொதுச் செயலாளர்வைகோ தெரிவித்தார்.
சென்னையில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
இலங்கையில் விடுதலைப்புலிகள் சண்டைநிறுத்தத்தைக் கடைபிடித்து வருகின்றனர். அவர்கள் சண்டைநிறுத்தம் அறிவித்த 24 மணிநேரங்களில் 150 தமிழர்களைஇலங்கை ராணுவ வீரர்கள் கொலை செய்தனர். இதைத் தட்டிக் கேட்க ஆளில்லை.
இலங்கையில் சமரசம் ஏற்படுத்தும் முயற்சியில் நார்வே இறங்கியுள்ளது. நார்வேயின் சமரசத்துக்கு இந்தியா ஆதரவு அளிக்க வேண்டும். மேலும்விடுதலைப்புலிகள் அறிவித்துள்ள சண்டைநிறுத்தத்தை ஏற்றுக் கொள்ளுமாறு அதிபர் சந்திரிகாவிடம், வாஜ்பாய் எடுத்துக் கூற வேண்டும்.
இலங்கையில் அமைதி ஏற்படுத்தும் வகையில் இந்தியாவில் விடுதலைப்புலிகள் மீது விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க வேண்டும். இலங்கைஇனப்பிரச்சனையைத் தீர்ப்பதற்கு சர்வதேச நாடுகளும் உதவி செய்ய வேண்டும். கடந்த 40 வருடங்களாக தமிழர்களுக்கு அதிக அதிகாரம்கொடுக்கிறோம் என்று வாக்குறுதி அளித்து ஏமாற்றி வந்துள்ளது இலங்கை அரசு.
பல்வேறு ஊழல் வழக்குகளில் தண்டனை பெற்றுள்ள ஜெயலலிதாவால் இனிமேல் தேர்தலில் நிற்க முடியாது. தேர்தல் ஆணையம் ஏற்கனவே இதுகுறித்து தெளிவுபடுத்தி விட்டது.
வரும் சட்டசபைத் தேர்தலில் தமிழகத்திலும், பாண்டிச்சேரியிலும் தேசிய ஜனநாயகக் கூட்டணியே வெற்றி பெறும். தமிழகத்தில் கூட்டணி ஆட்சி என்பதுசாத்தியமில்லாத ஒன்றாகும்.
பாண்டிச்சேரியில் பாட்டாளி மக்கள் கட்சிஆட்சி அமைக்குமா என்பது பற்றி நான் எதுவும் கருத்து கூற முடியாது. தமிழக ராஜீவ் காங்கிரஸ் தலைவர்வாழப்பாடி ராமமூர்த்தி, பா.ம.க.வை மட்டுமின்றி ம.தி.மு.க.வைப் பற்றியும் ஏராளமான புகார்களைக் கூறி வருகிறார் என்று குற்றம் சாட்டினார்வைகோ.
யு.என்.ஐ.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications