ஆனந்த்துக்கு ரூ 40 லட்சத்தில் சொகுசு வீடு
சென்னை:
உலக செஸ் சாம்பியன் ஆனந்துக்கு தமிழக அரசின் சார்பில் ரூ 40 லட்சத்தில் சொகுசு வீடு வழங்கப்படும் எனதமிழக முதல்வர் அறிவித்துள்ளார்.
டெஹ்ரானில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன் ஷிப் போட்டியில் வெற்றி பெற்ற விஸ்வநாதன் ஆனந்திற்குதமிழக அரசின் சார்பில் புதன்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது.
அப்போது ஆனந்திற்கு வெள்ளியால் செய்யப்பட்ட செஸ் போர்டை முதல்வர் நினைவு பரிசாக முதல்வர்வழங்கினார்.அப்போது முதல்வர் பேசியாதவது:
சென்ற 1990-ம் ஆண்டு கிராண்ட்மாஸ்டர் பட்டத்தை ஆனந்த் வென்ற போது சென்னையில் பாராட்டு விழாநடந்தது. அந்த பாராட்டு விழாவில் நானும் கலந்து கொண்டேன்.
இப்போது ஆனந்த் உலக சாம்பியன் ஷிப் பட்டத்தை வென்றுள்ளார். இது இவரது திறமைக்கும், புத்தி கூர்மைக்கும்கிடைத்துள்ள வெற்றி. இவர் தமிழகத்தை சேர்ந்தவர் என்பதை விட தஞ்சாவூரை சேர்ந்தவர் என்பதில் நான் மேலும்பெருமை அடைகிறேன்.
வீர சிவாஜியை ஜீஜீபாய் வளர்த்தது போல் ஆனந்த்தை உருவாக்கியவர் அவரது தாய். செஸ் விளையாட்டுஇந்தியாவிலிருந்து சென்ற விளையாட்டு என்கிறார்கள். கிராமத்தில் ஆடும் ஆடு புலி ஆட்டம்தான் செஸ். கில்லிவிளையாட்டுதான் கிரிக்கெட்.
நாட்டில் விளையாட்டுத் துறைகளில் களங்கம் ஏற்பட்டுள்ள நிலையில் ஆனந்த் வெற்றி பெற்றுள்ளது மகிழ்ச்சிஅளிப்பதாக உள்ளது.
விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்குபவர்களுக்கு வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் இதுவரை 7 பேருக்கு வீடுவழங்கப்பட்டுள்ளது. முதல்வர் விளையாட்டு விருது 12 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது.
ஆனந்தின் வெற்றியை பாராட்டி தமிழக அரசு சார்பில் சென்னை கோயம்பேட்டில் தெற்காசிய விளையாட்டுகிராமவளாகத்தில் இருக்கும் ஏ வகை சொகுசு வீடு வழங்கப்படும் என முதல்வர் கூறினார். இந்த வீட்டின் மதிப்பு ரூ20 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.
இந்த விழாவில் மத்திய இணை அமைசர் பொன். ராதாகிருஷ்ணன் பேசும் போது கூறியதாவது:
விஸ்வநாதன் ஆனந்திற்கு பத்மபூஷன் விருது வழங்குவது குறித்து மத்திய அரசு பரிசீலனை செய்து வருகிறது. இதுகுறித்து விரைவில் முடிவு செயய்ப்படும் என கூறினார்.
இந்த விழாவில் தமிழக அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி, பொள்ளாச்சி மகாலிங்கம், முன்னாள் ஹாக்கிஅணித்தலைவர் பாஸ்கரன், முன்னாள் கிரிக்கெட் அணித் தலைவர் ஸ்ரீகாந்த், தமிழக செஸ் கழக பொதுச்செயலாளர் மானுவேல் ஆரோன் உள்ளிட்ட பலர் கலந்தது கொண்டனர். ஆனந்தின் மனைவி அருணாவும்,ஆனந்தின் பெற்றோர்களும் இந்த விழாவில் கலந்து கொண்டனர்.












Click it and Unblock the Notifications