பெங்களூரில் இந்தியாவின் முதல் போர் விமானம் பரிசோதனை
Subscribe to Oneindia Tamil
பெங்களூர்:
இந்திய தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட இலகு ரக போர் விமானம் வியாழக்கிழமை பெங்களூரில் வெற்றிகரமாகப் பரிசோதனைசெய்யப்பட்டது.
8,500 கிலோ எடை கொண்ட இந்த இலகு ரக போர் விமானம் ஏவுகணைகளையும், இதர ஆயுதங்களையும் துல்லியமாகத் தாக்கும் ஆற்றல்பெற்றது.
1992 ம் ஆண்டு இந்திய விஞ்ஞானிகளால் வெகு நுட்பமாக இந்த இலகு ரக போர் விமானம் உருவாக்கப்பட்டது. இந்த இலகு ரக போர் விமானத்தைஉருவாக்குவதற்கு ரூ 2,188 கோடி செலவிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
வியாழக்கிழமை பெங்களூரில் எச்.ஏ.எல். தளத்திலிருந்து பறக்கவிடப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டதில் இந்த இலகு ரக போர்விமானம் தனதுமுழுத்திறனையும் வெளிப்படுத்தியதால் உலக அளவில் மிகச் சிறந்த போர்விமானமாக கருதப்படுகிறது.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications