3 எம்.எல்.ஏ.க்கள் பதவி நீக்கத்திற்கு தடை விதிக்க கோர்ட் மறுப்பு
சென்னை:
பாண்டிச்சேரி த.மா.கா மனோகர் பிரிவு எம்.எல்.ஏக்கள் மூன்று பேரை பதவி நீக்கம் செய்து புதுவை சபாநாயகர் பிறப்பித்த உத்திரவுக்கு இடைக்காலத்தடை விதிக்க உயர்நீதிமன்ற முதல் டிவிஷன் பெஞ்ச் மறுத்து விட்டது.
பாண்டிச்சேரி த.மா.கா மனோகர் பிரிவு எம்.எல்.ஏக்கள் மனோகர், ராஜசேகர் உடையார், ஏழுமலை ஆகிய மூன்று பேரும் உயர் நீதிமன்றத்தில்தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:
தமிழக த.மா.காவிற்கும் பாண்டிச்சேரி த.மா.கா.விற்கும் கட்சி விதிகளில் வித்யாசம் உண்டு. கடந்த சட்டசபைத் தேர்தலில் பாண்டிச்சேரி த.மா.காவில்ஐந்து எம்.எல்.ஏக்கள் தேர்ந்து எடுக்கப் பட்டோம். ஊழலை எதிர்த்து தொடங்கப்பட்ட த.மா.கா தனது கொள்கையை மாற்றிக் கொண்டதால்நாங்கள் மூன்று பேரும் தனியே பிரிந்து த.மா.கா மனோகர் பிரிவு என்று செயல்பட்டு வருகின்றோம்.
தற்பொழுது அமைச்சர்களாக இருக்கும் கந்தசாமி, தேனீ ஜெயக்குமார் ஆகியோரின் தூண்டுதலின் பேரில் கடந்த ( டிசம்பர்) மாதம் 25-ம் தேதி எங்கள்மூவரின் பதவியையும் சபாநாயகர் ரத்து செய்துள்ளார். கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் சபாநாயகர் இந்த உத்தரவைப் பிறப்பித்தது, சட்ட விரோதம்.
எனவே, சபாநாயகரின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தனர். மனுவை விசாரித்த நீதிபதி கே.பி.சிவசுப்பிரமணியன் ,புதுவை சபாநாயகரின் உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்க மறுத்தார். இது குறித்து ஒரு வாரத்தில் பதில் தரும் வகையில் புதுவை சபாநாயகர், சட்டசபைச்செயலாளர், அமைச்சர்கள் தேனீ. ஜெயக்குமார் , கந்தசாமி ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பவும் உத்திரவிட்டார்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications