முன்னாள் அமைச்சரின் சொத்துக்கள் ஜப்தி
மதுரை:
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் முன்னாள் அமைச்சர் பரமசிவத்தின் சொத்துக்களை ஜப்தி செய்ய மதுரை நீதிமன்றம் உத்தரவுபிறப்பித்துள்ளது.
கடந்த அ.தி.மு.க ஆட்சியில் 17-05-93 முதல் 9-5-96 வரை பரமசிவம் தொழிலாளர் நலத்துறை அமைச்சராக இருந்தார். அவர் பதவியில்இருந்த பொழுது அதிகார துஷ்பிரயோகம் செய்து 35 லட்சத்து 25 ஆயிரத்து 136 ரூபாய்க்கு வருமானத்திற்கு அதிகாமாக சொத்து வாங்கியதாக லஞ்ச ஒழிப்புபோலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.
இந்த சொத்துக்களை பரமசிவம் தனது மனைவி நல்லம்மாள் பெயரிலும் மூன்று மைனர் குழந்தைகள் பெயரிலும் வாங்கியதாக வழக்கு பதிவுசெய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து பரமசிவம் மீதும் அவரது மனைவி நல்லம்மாள் மீதும் சென்னை மூன்றாவது தனிக்கோர்ட்டில் குற்றப்பத்திரிகைதாக்கல் செய்யப்பட்டது.
வழக்கை நீதிபதி பி.அன்பழகன் விசாரித்து பரமசிவத்திற்கு இரண்டாண்டு சிறைத் தண்டனையும் பத்தாயிரம் ரூபாய் அபராதமும் விதித்தார். அவரது மனைவிநல்லம்மாளுக்கு ஒரு ஆண்டு சிறைத் தண்டனையும் ஐய்யாயிரம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பு கூறினார். மேலும் அவரது சொத்துக்களை முடக்கி வைக்கஉத்திரவிட்டார்.
இதைத் தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு பிரிவு துறையினர் மதுரை மாவட்ட தன்மை கோர்ட்டில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தனர். அதில் முன்னாள் அமைச்சர்பரமசிவத்தின் சொத்துக்களை முடக்கி வைத்ததை உறுதி செய்து, சொத்துக்களை ஜப்தி செய்ய உத்திரவிட வேண்டும் என்று கோரியிருந்தனர்.
மனுவை விசாரித்த நீதிபதி மாசிலாமணி வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்களை சேர்த்த அமைச்சர் பரமசிவத்தின் சொத்துக்களை ஜப்தி செய்யஉத்திரவிட்டார். மேலும் அவர் தனது தீர்ப்பில் பரமசிவத்தின் இரண்டு மகன்கள் மற்றும் மகள் ஆகியோர் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டாலும்சொத்துக்கள் அவர்கள் பெயரில் பினாமியாக இருப்பதால் அவர்களின் பெயரில் உள்ள சொத்துக்களும் தீர்ப்பில் அடங்கும் என்று கூறினார்.
மதுரையில் கொடிகுளத்தில் பரமசிவத்திற்கு 13 ஏக்கர் நிலம் மற்றும் 100 சென்டில் நிலம், மானகிரியில் ஒரு வீடும் உள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications