மேற்குவங்காளத்தில் பந்த்
கோல்கத்தா:
மேற்கு வங்காளத்தில் வெள்ளிக்கிழமை பொதுவேலை நிறுத்தத்திற்கு திரிணாமூல் காங்கிரஸ் அழைப்பு விடுத்துள்ளது.
பந்த் கடைபிடிக்கப்படுவதையடுத்து ரயில் மற்றும் பஸ் போக்குவரத்து ஸ்தம்பித்தது. கடைகள் அனைத்தும் மூடப்படிருந்தன. வியாபார ஸ்தலங்கள் எதுவும்இயங்கவில்லை.
கிழக்கு மற்றும் தென்னக ரயில்வே ஸ்தம்பித்தது. சாலைகளில் வெகு சில வாகனங்களே தென்பட்டன. ஆனால் இதுவரை அசம்பாவிதச் சம்பவங்கள்எதுவும் நடைபெறவில்லை. அத்துமீறி வன்முறைச் சம்பவங்கள் எதுவும் நடந்து விடாதவாறு மாநில அரசு பலத்த போலீஸ் பாதுகாப்பு போட்டுள்ளது.
காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா கட்சி தலைவர்கள் பந்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். சதாப்தி, ஹெளரா, இஸ்பாட், டொலி எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்துசெய்யப்பட்டுள்ளன.
முன்னதாக மிட்னாப்பூர் மாவட்டம் கேஷ்பூர் பகுதியில் திரினாமூல் காங்கிரஸ் கட்சி சார்பில் புதன்கிழமை இரவு பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்தில்திரிணாமூல் காங்கிரஸ் கட்சித் தலைவரும், ரயில்வே அமைச்சருமான மம்தா பானர்ஜி கலந்து கொண்டார். இந்தக் கூட்டத்தில் தலைநகர் கொல்கத்தாஉள்பட பல்வேறு நகரங்களிலிருந்து திரிணாமூல் காங்கிரஸ் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டம் முடிந்ததும் தொண்டர்கள் கார் மற்றும் வேன்களில் தங்கள் வீடுகளுக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது ஆங்காங்கே நின்று கொண்டிருந்தஇ.கம்யூனிஸ்ட் கட்சித் தொண்டர்கள், திரிணாமூல் காங்கிரஸ் தொண்டர்களை நோக்கி கற்களை வீசித் தாக்கினர்.
இதையடுத்து இரு கட்சித் தொண்டர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜி வந்த கார் மீதும் கல்வீச்சு நடந்தது.இதில் மம்தா காயமடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
யு.என்.ஐ.
-
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
மூத்த திரிணாமுல் தலைவர் மண்டை உடைப்பு.. ரத்தம் கொட்ட கொட்ட பானர்ஜி செய்த சம்பவம்! பரபரப்பு -
மகளிர் நிதி உதவித் திட்டம்.. 30 லட்சம் போலி பயனாளிகள்? மேற்கு வங்க சுவேந்து அதிகாரி உடனடி ஆக்ஷன் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications