ஹாலிவுட் படத்தைப் பார்த்து சிகரெட் குடிக்கும் இளைஞர்கள்
லண்டன்:
ஹாலிவுட் நடிகர்கள், தாங்கள் நடிக்கும் படங்களில் சிகரெட் குடிப்பதால், அதைப் பார்த்து அதே ஸ்டைலில் இளைஞர்களும் சிகரெட் குடிக்கிறார்கள்.
நடிகர்கள் படத்தில் நடிப்பதற்காகக் குடிக்கும் சிகரெட், இளைஞர்களை சிகரெட் குடிக்க ஊக்குவிப்பதாக உள்ளது என்று அமெரிக்க ஆய்வுகள்தெரிவிக்கின்றன.
1988 முதல் 1997 ம் ஆண்டு வரை வெளியாகி, பாக்ஸ் ஆபிஸ் ஹிட்டான 25 படங்கள் ஆய்வுக்காக எடுத்துக் கொள்ளப்பட்டது. இந்தப் படங்களை டாக்டர்ஜேம்ஸ் உள்பட பல டாக்டர்கள் ஆய்வு செய்தனர்.
அவர்கள் ஆய்வு முடிவில் தெரிவித்த விவரம் வருமாறு:
இந்தப் படங்களில் நடித்த 85 சதவீதத்திற்கும் மேற்பட்ட நடிகர்கள், நடிகைகள் சிகரெட் குடிக்கிறார்கள். மேலும் இந்தப் படங்கள் சிகரெட் குடிப்பதுதவறில்லை என்ற தவறான எண்ணத்தை மக்களிடையே குறிப்பாக இளைஞர்களிடையே பரப்பி விடுகிறது.
ஹோம் அலோன் 2, கின்டர்கார்டன் காப், மை பெஸ்ட் பிரென்ட் வெட்டிங், தி நாட்டி புரொபசர் போன்ற படங்கள் 200 நாட்களைத் தாண்டி ஓடிய படங்கள்.இந்தப் படங்களில் நடித்த நடிகர்கள் வெகு ஸ்டைலாக சிகரெட் பிடித்தது ஏராளமான இளைஞர்களைப் பாதித்துள்ளது. அதாவது நாமும் இதே போல் சிகரெட்குடித்தால் என்ன என்ற விபரீத எண்ணத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஹாலிவுட் படங்களில் காட்சிகளுக்கு மிக அத்தியாவசியத் தேவை ஏற்பட்டாலொழிய சிகரெட் குடிக்கும் காட்சி அமையக் கூடாது என்று தடைவிதிக்கப்பட்டிருந்தும், திரைப்படத் தயாரிப்பாளர்கள் அதை மீறி நடந்து கொள்கிறார்கள்.
இளைஞர்களும் தங்களுக்குப் பிடித்தமான நடிகர்கள் சிகரெட் குடித்தால், அதே போல் தாங்களும் குடிப்பதை கெளரவமாகவே நினைக்கிறார்கள் என்றுஅந்த அதிர்ச்சிக்குள்ளாக்கும் அந்த ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications