காஷ்மீர் பிரச்சனையை உடனடியாக தீர்க்க முடியாது
டெல்லி:
காஷ்மீர் பிரச்சனை குறித்து பாகிஸ்தானுடன் உடனடிப் பேச்சுவார்த்தை நடத்துவது சாத்தியமில்லாத ஒன்று என்று உள்துறை அமைச்சர் அத்வானி கூறினார்.
டெல்லியில் பாரதிய ஜனதா கட்சியின் செயற்குழுக் கூட்டம் முடிந்த பின் அத்வானி நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
காஷ்மீர் பிரச்சனை பல்லாண்டுகளாக உள்ளது. இந்தப் பிரச்சனையைத் தீர்ப்பதற்கு பாகிஸ்தான், தீவிரவாதிகள் மற்றும் இந்தியா சேர்ந்து பேச்சுவார்த்தைநடத்த முடியாது. அதாவது முத்தரப்பு பேச்சுவார்த்தைக்கு இந்தியா ஒருபோதும் சம்மதிக்காது.
காஷ்மீரில் அமைதி ஏற்பட வேண்டும் என்பதில் இந்தியா மிகவும் நிலையாக உள்ளது. காஷ்மீர் பிரச்சனையைத் தீர்ப்பதற்காக அனைத்து முயற்சிகளையும்இந்தியா செய்யும். எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில் இருக்கும் அனைத்து தீவிரவாதிகளையும் அப்புறப்படுத்துவதே இந்தியாவின் குறிக்கோள்.
ஜம்மு காஷ்மீரில் வன்முறையை குறைப்பதற்காக சண்டைநிறுத்தத்தை அறிவித்துள்ளது. தற்போது சண்டைநிறுத்தம் குடியரசு தினம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.மேலும் சண்டைநிறுத்தத்தையும் விட முக்கியமாக எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில் ராணுவ வீரர்களை உஷார்ப்படுத்துவது நல்லது என்றும், பாதுகாப்பைமுன்பை விட அதிகரிப்பது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் பாதுகாப்பைப் பலப்படுத்தினால் வன்முறையும், துப்பாக்கிச் சண்டை ஏற்படுவதும் பெருமளவு குறையும் என்று பாரதியஜனதா கருதுகிறது.
பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்புக்கள் லஸ்கார் ஈ தொய்பா, ஹிஸ்புல் முஜாஹிதின், ஹர்கத்துல் முஜாஹிதின் ஆகிய அமைப்புக்கள் தங்களது நடவடிக்கைகளைமிகவும் குறைத்துக் கொண்டுள்ளன.
ஆனால் அதே நேரம் டெல்லி செங்கோட்டையில் லஸ்கார் ஈ தொய்பா தீவிரவாதிகள் தாக்கியது மிகவும் கண்டிக்கத்தக்கது என்றார்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications