நெகடிவ் மார்க்கிங் முறை தவறானது: ராமதாஸ்
சென்னை:
நுழைவுத்தேர்வில் நெகடிவ் மார்க் முறை ஏழை,எளிய, பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்குஎதிரானது என பாட்டாளி மக்கள் கட்சி நிறுவன தலைவர் ராமதாஸ் கூறியுள்ளார்.
இது குறித்து ராமாதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கயிைல் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் மருத்துவ, தொழில்நுட்ப தேர்வுகளில் இந்த ஆண்டு முதல் அமல்படுத்தவிருக்கும் மாற்றங்கள் ஏழை,எளிய, மிகப் பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட மற்றும் கிராமப்புற மாணவர்களின் சேர்க்கையை பாதிக்கும் எனபா.ம.க. இதை வன்மையாக கண்டிக்கிறது.
மேலும் ப்ளஸ் 2 தேர்வில் மாணவர்கள் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையாக கொண்டு மருத்துவ தொழில்நுட்பபடிப்புக்காக மாணவர் சேர்க்கை இருக்க வேண்டும் என்பது எங்கள் கட்சியின் கொள்கை.
நுழைவுத் தேர்வு என்பது ஏழை, எளிய, பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மாணவர்களை நுழையவிடக் கூடாதுஎன்ற நுழைவுத் தேர்வு என்பது எங்கள் கருத்து.
இந்த முறை உண்மையில் அறிவாளிகளாக உள்ள இந்த சமூகங்களைச் சார்ந்த பல மாணவர்களை இந்தபடிப்புகளுக்குள் நுழைய விடாமல் செய்து அவர்களை வஞ்சித்துள்ளது.
ஆனால் இந்த ஆண்டு முதல் அறிமுகப்படுத்தப்படவுள்ள தவறான முறைதான் நெகடிவ் மார்க்கிங் முறை. இந்தமுறை மாணவர்களை பெருமளவு பாதிக்கும்.
தேர்வு எழுதும் எவரும் யூகத்தின் அடிப்படையில் பதில் அளிக்க மாட்டார்கள். அதானால் இந்த நெகடிவ் மார்க்முறை மாணவர்களின் திறமையை ஒரே அளவில் காட்டும்.
தேர்வு எழுதும் மாணவர்கள் அறிவிலும், சமுதாய அமைப்பிலும் பல வேறுபாடுகள் உள்ளன. மிகவும்பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட வகுப்புகளில் இருக்கும் மாணவர்கள் சில கேள்விகளுக்கு யூகத்தின்அடிப்படையில் பதிலளிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும்.
இதனால் தவறான கேள்விகளுக்கு பூஜ்யம் மதிப்பெண் அளிக்கலாமே தவிர நெகடிவ் மார்க் அளிக்கப்படக்கூடாது. நெகடிவ் மார்க்கிங் முறை அவர்களுக்கு கிடைக்க இருக்கும் வாய்ப்பு நழுவிவிடும்.
இந்த மாணவர்களுக்கு பொதுப் பிரிவில் கிடைக்க வேண்டிய வாயப்பும் போய்விடும். எனவே இந்த முறையைதமிழக அரசு அனுமதிக்கக் கூடாது.
தேர்வு கட்டணத்தை தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு 50 சதவிகிதமாகவும் ( ரூ 200 -லிருந்துரூ 300 ஆகவும்), மற்றவர்களுக்கு (ரூ 400 -லிருந்து ரூ 500 ஆகவும்) உயர்த்தியிருப்பது மிகவும் தவறானது.அனைத்து பிரிவு மாணவர்களும் தற்போதுள்ள கட்டணத்தில் இருந்து 10 சதவிகிதம் மட்டும் உயர்த்த வேண்டும்என கேட்டுக் கொள்கிறேன் என கூறியுள்ளார்.
இது குறித்து சென்னை அண்ணா பல்கலைக்கழகம் தெரிவிக்கையில் 2001-ம் ஆண்டு முதல் நெகடிவ் மார்க்கிங்முறை நுழைவுத் தேர்வில் அறிமுகம் செய்வது குறித்து பரிந்துரை செய்யப்பட்டுள்ளது, இது குறித்த இறுதி முடிவைஅரசுதான் முடிவெடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளது.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications