சண்டை நிறுத்தத்தை ஏற்க மாட்டோம்: இலங்கை அரசு
கொழும்பு:
இலங்கையில் விடுதலைப்புலிகள் அறிவித்துள்ள சண்டைநிறுத்தத்தை ஏற்க முடியாது என்று இலங்கை அரசுதிட்டவட்டமாக மீண்டும் அறிவித்துள்ளது.
இலங்கை அமைச்சரவைக் கூட்டம் அதிபர் சந்திரிகா குமாரதுங்கா தலைமையில் வெள்ளிக்கிழமை நடந்தது.அமைச்சரவைக் கூட்டத்துக்குப்பின் செய்தித் துறை தொடர்பாளர் அனுரா பிரியதர்சனா நிருபர்களுக்கு அளித்தபேட்டி:
இலங்கை இனப்பிரச்சனைக்குத் தீர்வு காண இலங்கை அரசு விரும்புகிறது. அதே நேரம் எவ்வித பிரச்சனையுமின்றிஅமைதியான முறையில் காணப்படும் தீர்வையே இலங்கை அரசு விரும்புகிறது.
இதற்கிடையே விடுதலைப்புலிகள் சண்டை நிறுத்தம் அறிவித்துள்ளனர். ஆனால் அவர்கள் முறையாக இலங்கைஅரசுக்கு அறிவிக்கவில்லை. அவர்கள் சண்டைநிறுத்தம் செய்யப்போவதாக நார்வே தூதுக் குழுவினரிடம் மட்டும்தான் இதுகுறித்துக் கூறியுள்ளனர்.
புலிகளின் சண்டைநிறுத்த அறிவிப்பை இலங்கை அரசு ஏற்பதாக இல்லை. அமைதியான முறையில் இலங்கைப்பிரச்சனையைத் தீர்த்து வைப்பதே அரசின் குறிக்கோள் ஆகும் என்றார்.
இருப்பினும், விடுதலைப்புலிகளின் சண்டைநிறுத்தத்தை ஏற்று தாக்குதலை கைவிட வேண்டும் என்று இலங்கைஅரசை 11 தமிழர் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications