ஈவ்- டீசிங் கொடுமைக்கு மாணவி பலி
திருநெல்வேலி:
ஈவ் -டீசிங் கொடுமைக்கு மேலும் ஒரு மாணவி திருநெல்வேலி மாவட்டத்தில் பலியாகியுள்ளார்.
தமிழகத்தில் பல பெண்கள் ஈ வ்-டீசிங் காரணமாக பல பெண்கள் இறந்துள்ளனர். தற்கொலையும் செய்துகொண்டுள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை அருகேயிருக்கும் கலங்காதகண்டி என்ற ஊரில் வசித்து வருபவர்கோவிந்தராஜ். இவரது மகள் கோகிலா (14). இவர் செங்கோட்டையில் இருக்கும் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்துவருகிறார். இவர் ஈவ்-டீசிங் காரணமாக தற்கொலை செய்து கொண்டார்.
கோவிந்தராஜன் (15) என்ற 10-வது படிக்கும் மாணவர் பல காலமாக கோகிலாவை கிண்டல் செய்து வந்தார்.சம்பவத்தன்று கோகிலாவை நடு ரோட்டில் வைத்து அவமானப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது
இந்த சம்பவத்தால் வேதனையடைந்த கோகிலா வியாழக்கிழமை காலை வீட்டில் யாரும் இல்லாதபோதுமண்ணெண்ணெய்யை ஊற்றி தீ வைத்துக் கொண்டு தற்கொலை செய்து கொண்டு இறந்து போனார்.
இந்த சம்பவம் தொடர்பாக கோகிலாவின் தாய் போலீசில் புகார் செய்தார். இந்த புகாரின் அடிப்படையில்கோவிந்தராஜனை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்தனர். அவரை 15 நாட்கள் காவலில்வைக்கும்படி நீதிபதி உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications