திருச்சியில் தி.மு.க.வுக்கு எதிராகப் போர்க்கொடி
திருச்சி:
திருச்சி மாவட்டத்தில் அமைச்சர் நேருவுக்கு எதிராக முத்தரையர் சமூகத்தினர் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.
திருச்சி மாவட்டம் லால்குடி தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு அமைச்சராக இருப்பவர் நேரு. இவருக்குஎதிராக முத்தரையர் சங்கத்தினர் போர்க்கொடி உயர்த்தியுள்ளதால் அமைச்சர் நேருவுக்கு கடும் சிக்கல்ஏற்பட்டுள்ளது.
திருச்சி மாவட்டத்தில் திருச்சி -1, திரு ச்சி -2, லால்குடி, ஸ்ரீரங்கம், திருவரம்பூர், மருங்காபுரி, தொட்டியம், முசிறி,உப்பிலியாபுரம் ஆகிய 9 தொகுதிகள் உள்ளது. இதில் உப்பிலியாபுரம் மட்டும் தனி தொகுதி.
திருச்சி மாவட்டத்தில் இருக்கும் அனைத்து தொகுதியும் தற்போது தி.மு.க. வசம் இருக்கிறது. திருச்சி மாவட்டத்தில்தி.மு.க.வை வளர்க்க மிகவும் பாடுபட்டவர் கே.என். நேரு.
தற்போது திருச்சி மாவட்டத்தில் முத்தரையர் சமூகத்தினர் நேருவுக்கு எதிராக இருப்பதற்கு காரணம் சிலவாரங்களுக்கு முன் நடந்த செயற்குழு கூட்டத்தில் முத்தரயைர் சமூகத்தை சேர்ந்த தி.மு.க. உறுப்பினர் மருதமுத்துஅமைச்சரை தரக்குறைவாக பேசினார்.
இதனால் கோபமடைந்த நேரு மருதமுத்துவை தாக்கியதோடு அவர் ஜாதியையும் தரக்குறைவாக பேசியதாகதகவல் பரவியது. இதனால் கோபமுற்ற முத்தரையர் சமூகத்தினர் ஜாதி பெயரை இழிவு படுத்தியதால் அமைச்சர்உடனே பதவி விலக வேண்டும் என பல்வேறு பகுதிகளில் நோட்டீஸ் ஒட்டியுள்ளனர்
முத்தரையர் சமூகத்தினர் சில நாட்களுக்கு முன் மணச்சநல்லூரில் நடக்கவிருந்த விழாவில் அமைச்சர் பங்கேற்றால்கறுப்பு கொடி காட்டப்போவதாக அறிவித்தனர். இதையடுத்து அமைச்சர் விழாவில் பங்கேற்கவில்லை.
திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 தொகுதிகளில் முத்தரையர் அதிக அளவில் வசிக்கக்கூடிய லால்குடி,ஸ்ரீரங்கம்,தொட்டியம்,மரூங்காபுரி, முசிறி உள்ளிட்ட 5 தொகுதிகளில் தங்கள் தயவின்றி எந்த கட்சியும் வெற்றிபெற முடியாது என முத்தரையர்கள் கூறி வருகின்றனர்.
முத்தரையர்கள் அதிகம் வசிக்கக்கூடிய பகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சர் நேரு தங்கள்சமூகத்தினரை இழிவாக பேசியதை முதல்வர் கண்டிக்காததும் முத்தரையர் இனத்தவர்களிடையே வருத்தத்தைஏற்படுத்தியுள்ளது.
இப்போது இந்த பிரச்னையில் அரசு தலையிட்டு பிரச்னையை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என அவர்கள்வலியுறுத்தி வருகின்றனர்.
அமைச்சருக்கு எதிராக முத்தரையர் சமூகத்தினர் ஏற்படுத்தியுள்ள பிரச்னை அமைச்சருக்கு மட்டுமல்லது தி.மு.க.விற்கும் சட்டசபை தேர்தலில் பெரும் பிரச்னையை ஏற்படுத்தும் என எதிர் கட்சியினர் கருதுகின்றனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications