மீண்டும் பிரபாகரனை சந்திக்கத் தயாராகிறது நார்வே தூதுக்குழு
கொழும்பு:
இலங்கை இனப்பிரச்சனைக்குத் தீர்வு காணும் வகையில் நார்வே தூதுக்குழுத் தலைவர் எரிக்சோல்ஹெம் மீண்டும் விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனைசந்தித்துப் பேசலாம் என்று தெரிகிறது.
இலங்கை இனப்பிரச்சனையை கூடிய விரைவில் சுமூகமாக தீர்த்து வைக்கும் அனைத்து முயற்சிகளிலும் இறங்கியுள்ளது நார்வே தூதுக்குழு. முன்னதாகஇனப்பிரச்சனைக்கு தீர்வு காணும் பொருட்டு, விடுதலைப்புலிகள் சண்டைநிறுத்தம் அறிவித்துள்ளனர். இதை இலங்கை அரசு நிராகரித்தது.
இதையடுத்து இலங்கையிலுள்ள தமிழர் கட்சிகள், புத்த பிட்சுக்கள் மற்றும் பிற கட்சியினர், விடுதலைப்புலிகளின் சண்டைநிறுத்தத்தை, இலங்கை அரசு ஏற்கவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளன.
இந்த நிலையில் நார்வே தூதுக்குழுத் தலைவர் கடந்த வாரம் பிரபாகரனைச் சந்தித்துப் பேசுவதாக இருந்தது. சில தவிர்க்க முடியாத காரணங்களால் அவரதுவருகை ஒத்தி வைக்கப்பட்டது. இதற்கிடையே அவர் மீண்டும் இலங்கைக்குச் சென்று அமைதிப் பேச்சுவார்த்தைக்கான ஆயத்தங்களில் இறங்கலாம் என்றுதெரிகிறது.
எரிக் சோல்ஹெம் வரும் புதன்கிழமை இலங்கைக்கு வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக அவர் நவம்பர் 1 ம் தேதி இலங்கைக்குச் சென்றுபுலிகள் தலைவர் பிரபாகரனைச் சந்தித்துப் பேசினார்.
அவர் பின்னர் பத்திரிக்கையாளர்களிடம் கூறுகையில், அமைதிப் பேச்சுவார்த்தையை தொடங்குவதில் பிரபாகரன் மிகத் தீவிரமாக உள்ளார் என்று கூறினார்எனபது நினைவிருக்கலாம்.
யு.என்.ஐ.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications