சந்திரிகாவை சந்திக்கிறார் நார்வே தூதுக்குழு தலைவர்
கொழும்பு:
இலங்கை இனப்பிரச்சனைக்குத் தீர்வு காண்பது குறித்து நார்வே தூதுக்குழுத் தலைவர் எரிக் சோல்ஹெம், அதிபர்சந்திரிகாவை திங்கள்கிழமை சந்தித்துப் பேசுகிறார்.
பல ஆண்டுகளாக இலங்கையில் நடந்து வரும் இனப்பிரச்சனைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும்என இலங்கை அரசும், புலிகளும் அறிவித்து வருகின்றனர்.
ஆனால் பேச்சுவார்த்தை துவங்குமுன் சண்டைநிறுத்தம் செய்ய வேண்டும் என புலிகள் வற்புறுத்துகின்றனர்.தற்போது ஒரு மாதகால ஒரு தரப்பு சண்டை நிறுத்த அறிவிப்பை புலிகள் அறிவித்துள்ளனர்.
ராணுவ வீரர்களின் கடும் தாக்குதல் காரணமாக புலிகளின் தரப்பில் கடும் சேதம் ஏற்பட்டுள்ளது.ஆள்பற்றாக்குறையை போக்குவதற்காக, ஏராளமான பள்ளிச் சிறுவர்களையும் புலிகள் தங்கள் படையில்ஈடுபடுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் மீண்டும் புதிய வழிமுறைகளுடன் இரு தரப்பினருடன் பேச்சு நடத்துவதற்காக, நார்வே குழுத்தலைவர் எரிக் சோல்ஹெம் இலங்கை வருகிறார். திங்கள்கிழமை அவர், அதிபர் சந்திரிகாவை சந்தித்துப் பேசுகிறார்.
இதற்கிடையே புலிகளுடன் பேச்சுவார்த்தை துவங்கும் முன் சண்டைநிறுத்தம் செய்ய மாட்டோம் என்று அதிபர்சந்திரிகா உறுதியாக அறிவித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications