தீக்குளிப்போம்..தி.தெ.மு.க. மிரட்டல்
சென்னை:
முல்லைப் பெரியாறு அணையின் நீர் அளவை 152 அடியாக உயர்த்த அனுமதிக்காவிட்டால், கேரள முதல்வர் வீட்டு முன்பாக தீக்குளிப்போம் என்று திராவிடதெலுங்கர் முன்னேற்றக் கழகத் தலைவர் காமாட்சி நாயுடு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து சென்னையில் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
முல்லைப் பெரியாறு அணை பலமாக உள்ளது என்று மத்தியக் குழு உறுதி செய்த பிறகும், அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த கேரள அரசு முரண்டுபிடிக்கிறது. பொய்யான காரணங்களைக் காட்டி முட்டுக்கட்டை போடுகிறது.
இந்த நிலை தொடர்ந்து நீடித்தால் கேரள அரசுக்கு எதிராக தமிழகத்தில் வசிக்கும் மலையாள மக்களைத் திரட்டி போராட்டம் நடத்துவோம்.கேரளாவில் முதல்வர் ஈ.கே.நாயனார் வீட்டு முன்பாக எங்கள் கட்சியினர் தீக்குளித்து உயிரை விடுவர். முல்லைப் பெரியாறு பிரச்சனைக்கு அனைத்துக் கட்சிகூட்டத்தைக் கூட்டி தீர்வு காண வேண்டும்.
அடுத்த மாதம் 10 ம் தேதி சென்னையில் எங்கள் கட்சியின் மாநில மாநாடு நடத்தப்படுகிறது. மாநாட்டில் முன்னாள் முதல்வர்கள் உள்பட பல்வேறுகட்சித் தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள் என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications