மொடக்குறிச்சியிலிருந்து இடம்பெயரும் தலைவலி
ஈரோடு:
1994 ம் ஆண்டு மொடக்குறிச்சி சட்டசபைத் தேர்தலில் 1033 விவசாயிகளை தேர்தலில் நிற்க வைத்து தேர்தல் கமிஷனுக்கு தலைவலியைக் கொடுத்தவிவசாயிகள் சங்கம் இந்த முறை பெருந்துறை தொகுதியில் ஒரு வேட்பாளரை மட்டும் களத்தில் இறக்க முடிவு செய்துள்ளது.
கடந்த 1994ம் ஆண்டு நடந்த தேர்தலில் விவசாயிகள் சங்கம் மொடக்குறிச்சி சட்டசபைத் தேர்தலில் ஒரு சாதனையைச் செய்தது. இந்தத் தொகுதியால்தேர்தல் கமிஷனுக்கே பெரும் தலைவலி ஏற்பட்டது. இதற்குக் காரணம், இந்தத் தொகுதியில் 1033 விவசாயிகள் வேட்பு மனுத் தாக்கல் செய்தனர்.
இத்தனை மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டதால், தேர்தல் கமிஷனினுக்கு பெரும் தலைவலி வந்தது. இதையடுத்து அந்த தொகுதியில் பேச்சுவார்த்தை நடத்தியபின்னர் விவசாயிகள் அனைவரும் வேட்பு மனுவை வாபஸ் பெற்றனர்.
இப்போது மீண்டும் ஒரு புதிய சிக்கலை இந்த முறை பெருந்துறைத் தொகுதியில் உருவாக்க விவசாயிகள் சங்கம் முடிவு செய்துள்ளது. இதன்படி, பெருந்துறைத்தொகுதியில் பிரபலமான ஒருவரைக் களத்தில் நிறுத்த முடிவு செய்துள்ளது.
இந்த தொகுதியில் வெற்றி பெரும் வேட்பாளர்கள் யாரும் 10 ஆயிரம் ஓட்டிற்கு மேல் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதில்லை. எனவே, இங்குவிவசாயிகள் சங்கம் போட்டியிட்டால், இந்த அளவிற்கும் மேலான ஓட்டுகள் கிடைக்கும் என்பது விவசாயிகள் சங்கத்தினரின் கணக்கு.
இங்கு ஒரு வேட்பாளரை நிற்க வைத்து எந்தக் கட்சிக்கும், எந்தக் கூட்டணிக்கும் எதிராக வேண்டுமானலும் பிரச்சாரம் செய்யலாம் என்ற முடிவைஎடுத்துள்ளது. இந்த வேட்பாளர் வெற்றி பெறாவிட்டாலும் கூட இரண்டாம் இடத்திற்கு வர இயலும் என்ற கணக்குப் போடப்பட்டது.
எனவே, எந்தக் கூட்டணிப் பக்கம் விவசாயிகள் சங்கம் சாய்ந்தாலும், அந்த அணி வெற்றி பெறும் என்ற நிலை உருவாகியுள்ளது. இந்தத் தொகுதியைஎந்த அரசியல் கட்சியிடமிருந்து பெற்று அங்கு விவசாயிகள் சங்கம் போட்டியிட்டால் வெற்றி பெறும் என்ற நிலையை உருவாக்கியுள்ளது.
விவசாயிகள் சங்கம் இங்கு போட்டியிடுவது உறுதியாகுமா என்பது இன்னும் இரண்டு மாதங்களில் முடிவு செய்யப்படும்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications