சுதேசிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறது பா.ஜ.க
கோவை:
பாரதிய ஜனதா கட்சி சுதேசிக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறது என்று மத்திய பண்பாடு மற்றும்சுற்றுலாத்துறை அமைச்சர் அனந்தகுமார் தெரிவித்தார்.
கோவையில் நடக்கும் சுதேசிப் பொருட்களின் கண்காட்சிக்கு அடிக்கல் நாட்டும் விழாவில் மத்திய பண்பாடுமற்றும் சுற்றுலாத் துறை அமைச்சர் அனந்தகுமார் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
கடந்த 3 ஆண்டுகளாக பாரதிய ஜனதா கூட்டணி ஆட்சியில் சுதேசிக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுவருகிறது. இது வரை எந்த அரசும் சாதிக்காத செயல்களை இந்தியா சாதித்து முன்னணியில் இருந்து வருகிறது.பொக்ரானில் அணுகுண்டு வெடித்தது இந்திய தொழில்நுட்பம் தான். கார்கில் போரில் பயன்படுத்தப்பட்டஆயுதங்களில் பல இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டது.
பாரதிய ஜனதா அரசு அந்நிய நாட்டுப் பொருட்களை அனுமதிக்கிறது என குற்றச் சாட்டுக்களை அள்ளி வீசி வரும்எதிர்க் கட்சிகள் தான் அன்றைக்கு காட் மற்றும் சர்வதேச ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளன.உலகமயமாக்களை வேறு வழியின்றி நாம் ஏற்றாலும் கூட இந்திய நாட்டுத் தயாரிப்புகள் மற்றும்தொழிற்சாலைகளின் நலனைக் காக்க தவற மாட்டோம். நாட்டின் நலனை எந்த வகையிலும் விட்டுக் கொடுக்கமாட்டோம்.
அமெரிக்காவில் வளர்ச்சி பெறாத டிஜிட்டல் தொழில்நுட்பம் இந்தியாவில் வளர்ச்சியடைந்துள்ளது.அமெரிக்காவில் இன்னும் அனலாக் சிஸ்டம் தான் தொலைபேசித் துறையில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
வேளாண்மைப் பொருட்களை குறைந்த விலையில் இங்கு இறக்குமதி செய்யப்படுவதாகக் கூறப்படுகிறது.அவ்வாறு நடக்கவில்லை, இறக்குமதி செய்யப்படும் உணவுப் பொருட்களுக்கு சரியான தீர்வை வரிவிதிக்கப்படுகிறது. விலை கட்டுப்பாட்டிற்குள் தான் வைக்கப்பட்டுள்ளது.
மேற்கு வங்காளத்தில் மம்தா பானர்ஜி மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுவருகிறது. தி.மு.கவுக்கும் பாட்டாளி மக்கள் கட்சிக்கும் இடையே இருக்கும் மோதல் தனிப்பட்ட பிரச்னை. இதுதேசிய ஜனநாயகக் கூட்டணியை எந்த விதத்திலும் பாதிக்காது என்றார் அனந்தகுமார்.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
நிர்மலா சீதாராமனை சந்திக்கும் விஜய்.. 20 நிமிடத்தை தாண்டுமா? மோடி சந்தித்த கையோடு அடுத்த முக்கிய அப்பாயின்மென்ட்! -
நிர்மலா சீதாராமனை சந்தித்த விஜய்! நிதி விவகாரத்தில்.. தமிழ்நாடு வைத்த முக்கிய கோரிக்கை! -
விஜய் கொடுத்த ரியாக்ஷன்..! மோடி - விஜய் இடையே வெறும் 10 நிமிட சந்திப்பு..! பேசியது என்ன? -
புதுச்சேரியில் அமைச்சர்கள் நியமனம்.. முதல்வர் ரங்கசாமியுடன் கருத்து வேறுபாடு? நமச்சிவாயம் விளக்கம் -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..!












Click it and Unblock the Notifications