ராமதாஸ் மகனை வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கக் கோரிக்கை
பாண்டிச்சேரி:
பாண்டிச்சேரியில் உள்ள வாக்காளர் பட்டியலில் இருந்து பாட்டாளி மக்கள் கட்சி நிறுவன தலைவர் ராமதாஸின் மகன் அன்புமணியின் பெயரை நீக்கவேண்டும் என்று பாண்டிச்சேரி யூனியன் பிரதேச காங்கிரஸ் தலைவர் நாராயண சாமி கோரிக்கை விடுத்துள்ளார்.
பாண்டிச்சேரியில் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
அன்புமணியின் பெயரை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்க வேண்டும் என்று ஏற்கனவே நான் தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை மனுகொடுத்துள்ளேன்.
பாரதிய ஜனதா ஆதரவின்றி யாரும் பாண்டிச்சேரியில் ஆட்சி அமைக்க முடியாது என்று அக்கட்சியின் தலைவர் நரேந்திர மோடி கூறியிருப்பது குறித்துக்கவலையில்லை. ஏனெனில் அக்கட்சிக்கு பாண்டிச்சேரியில் தொண்டர்களே கிடையாது.
மத்திய அரசின் புதிய விவசாயக் கொள்கையினால் 75 சதவீத விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். விவசாயிகள் நலனுக்காக பாண்டிச்சேரிகாங்கிரஸ் கமிட்டியினர் பிப்ரவரி மாதம் முதல் வாரம் போராட்டம் நடத்தும் என்றார் நாராயண சாமி.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications