முட்டை அழிப்பால் கறிக்கோழி வளர்ப்பு பாதிப்பு
கோவை:
கோவை மாவட்டத்தில் கறிக்கோழி உற்பத்தி அதிகரித்து வருவதால், பண்ணையாளர்கள் பெரும்நஷ்டமடைந்துள்ளனர்.
தமிழகத்தில் கறிக் கோழி உற்பத்தியில் முன்னணி வகிப்பது கோவை மாவட்டத்தில் உள்ள பல்லடம், பொள்ளாச்சி,உடுமலைப் பேட்டைப் பகுதியாகும். இந்தப் பகுதியின் வேளாண்மைத் தொழிலின் உபதொழிலாகவிவசாயிகளுக்கு பயன் அளித்து வந்தது கறிக் கோழி வளர்ப்பாகும். கோவை மாவட்டம் தவிர, நாமக்கல், ஈரோடு,சேலம் பகுதிகளில் கோழி வளர்ப்பு இருந்து வருகிறது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு கறிக் கோழி உற்பத்தியைக் கட்டுப்படுத்த, கோடிக் கணக்கான ரூபாய் மதிப்புள்ளகரு முட்டைகள் அழிக்கப்பட்டன. இந்த முட்டைகள் அழிக்கப்பட்டாலும், கறிக் கோழி உற்பத்தி ஓரளவுகட்டுப்பாடான சூழ்நிலையில் வந்தது.
ஆனால், மீண்டும் கரு முட்டைகள் தொடர்ந்து அளிக்க முடியாத சூழ்நிலை உருவானது. எனவே, கறிக் கோழியின்உற்பத்தியும் நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது. இதையடுத்து கறிக் கோழி உற்பத்தியின் தொடர் விலை வீழ்ச்சிஏற்பட்டது.
இங்குள்ள 5 ஆயிரம் பண்ணைகளில் வாரம் ஒன்றிற்கு 50 லட்சம் கிலோ கறிக் கோழி உற்பத்தி செய்யப்படுகிறது.ஆனால், உற்பத்தியை விட நுகர்வோரின் அளவு அதிகரிக்கவில்லை. எனவே, உற்பத்தி செய்யும் பண்ணைகளில்கறிக் கோழி தேக்கம் ஏற்பட்டது.
கறிக் கோழி தேக்கம் ஏற்பட்டாலும், தொடர்ந்து விலையில் எவ்வித குறைவும் ஏற்படவில்லை. சராசரியாக கடந்தஓராண்டில் ஒரு கிலோ கறிக் கோழி உற்பத்தி ரூ. 31 ஆக இருந்தது. ஆனால், விற்பனை கிலோ ஒன்றிற்கு ரூ. 27ஆக இருந்தது. இதனால் கடந்த இரண்டு மாதங்களில் பண்ணை உற்பத்தியாளர்களுக்கு 100 கோடி ரூபாய்க்கும்மேல் இழப்பு ஏற்பட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications