தி.மு.க.ஆட்சியில் 80 புதிய நீதிமன்றங்கள்
சென்னை:
தமிழகத்தில் தி.மு.க.ஆட்சிக்கு வந்த பிறகு 4 ஆண்டுகளில் 80 கோர்ட்டுக்கள் திறக்கப்பட்டுள்ளன என்று சட்ட அமைச்சர் ஆலடி அருணா தெரிவித்தார்.
சென்னை சட்டக்கல்லூரியில் நடந்த கருத்தரங்கு ஒன்றில் கலந்து கொண்ட அமைச்சர் ஆலடி அருணா பேசியதாவது:
தமிழகத்தில் 104 கோர்ட்டுக்கள் திறக்க சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்தது. 4 ஆண்டில் மட்டும் இதுவரை 80 புதிய கோர்ட்டுக்களை திறந்துவிட்டோம்.
சட்டத்தை யார் மீறினாலும் அதை தட்டி கேட்கும் அளவிற்கு நமது நீதித்துறை அமைந்துள்ளது. இப்போது ஜனநாயகம் மக்களால் மட்டுமல்லாமல்நீதித்துறையாலும் காக்கப்பட்டு வருகின்றன.
தமிழ்நாடு இலவச சட்ட உதவி ஆணையம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அதனுடைய செயல்பாடுகள் திருப்தி அளிக்கும் வகையில் உள்ளது. தமிழ்நாட்டில் 14லட்சம் வழக்குகள் மாஜிஸ்ட்ரேட் கோர்ட்டுகள் முதல் ஐகோர்ட் வரை தேக்கம் அடைந்துள்ளன. இந்த தேக்கத்தை போக்க இதுபோன்ற சட்டகருத்தரங்குகள் மூலம் ஆலோசனைகள் கூற வேண்டும்.
தமிழகத்தில் தி.மு.க.ஆட்சி நடந்து வரும் இந்த நான்கு ஆண்டுகளில் மட்டும் 80 புதிய நீதிமன்றங்கள் திறக்கப்பட்டுள்ளன என்றார் ஆலடி அருணா.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications