இன்று சந்திர கிரகணம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

இந்தியா உள்பட ஆசியாவின் சில பகுதிகளில் செவ்வாய்க்கிழமை இரவு ஏற்படும் சந்திரகிரகணத்தை காணலாம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

செவ்வாய்க்கிழமை இரவு 1.21. மணிக்கு சந்திரகிரகணம் ஆரம்பிக்கிறது. இது 1.51 க்கு முழுமையடையும். சந்திரகிரகணம் இந்த ஆண்டு ஒருமணிநேரம் 2 நிமிடம் நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இறுதியாக கடந்த ஆண்டு ஜூலை 12 ம் தேதி சந்திரகிரகணம் ஏற்பட்டது. அப்போது ஒரு மணிநேரம் 47 நிமிடம் கிரகணம் நீடித்தது.

இந்த சந்திரகிரகணத்தை இந்தியா, மேற்கு ஆஸ்திரேலியா, ஆசியா, ஆப்பிரிக்கா, ஐரோப்பா, வடக்கு கனடா மற்றும் அலாஸ்கா ஆகிய பகுதிகளில்பார்க்க முடியும் என்று டெல்லியில் உள்ள நேரு கோளரங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அடுத்த சந்திரகிரகணம் 2003 ம் ஆண்டின் நவம்பர் மாதம் 9 ம்தேதி ஏற்படும்.

கிரகணம் என்பது என்ன?

கிரகணங்கள் சூரிய கிரகணம், சந்திர கிரகணம் என்று இரண்டகாப் பிரிக்கப்பட்டுள்ளது. பூமிக்கும் சூரியனுக்கும் இடையே சந்திரன் வருவது சூரியகிரகணமாகும். சந்திரன் விலகும் வரை சூரியன் மறைக்கப்பட்டிருக்கும்.

சூரியனுக்கும், சந்திரனுக்கும் இடையே பூமி வருவது சந்திர கிரகணமாகும். பூமியின் நிழல் சந்திரனை விட்டு விலகும் வரை சந்திர கிரகணம் நீடித்திருக்கும்.

இந்த கிரகணங்கள் உலகில் எல்லா நாடுகளிலும் எல்லா சமயங்களிலும் தெரிவதில்லை. கிரகணங்களின் சுற்றுப்பாதையில் மேற்கூறுய குறுக்கீடுநேரத்தைப் பொறுத்து கிரகணங்கள் அமைவதால் இவை சில நாடுகளில் மட்டுமே தெரிகின்றன.

இந்த ஆண்டு (விக்ரம) முதல் பூரண சந்திரகிரஹணம் 16.07.2000 அன்று நிகழ்ந்தது. இரண்டாவது சந்திர கிரகணம் 9.1.2001, பெளர்ணமி,செவ்வாய்கிழமை அன்று நிகழ்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+