கல்வியின் தரத்தை உயர்த்த கவர்னர் கோரிக்கை

Subscribe to Oneindia Tamil

திருச்சி:

உயர்கல்வியின் தரத்தை உயர்த்த வேண்டும் என்று தமிழக கவர்னர் பாத்திமா பீவி திருச்சி ஜமால் முகமது கல்லூரி பொன்விழாவில் கூறினார்.

பொன்விழாவில் அவர் பேசியதாவது:

ஒவ்வொருவருக்கும் கல்வி மிக முக்கியமானது. வேலைவாய்ப்பு, வணிக முயற்சிகளில் நல்ல நடத்தையை பின்பற்றுவது போன்றவற்றிற்கு கல்விஅவசியமானது. இதன் பயனாக நல்லெண்ணம், புரிந்து கொள்ளும் உணர்வு, ஒத்துழைப்பு, சகோதரத்துவம் ஏற்படும்.

இந்திய உயர்கல்வி முறை உலகில் உள்ள பெரிய முறைகளில் ஒன்றாகத் திகழ்கிறது. தற்போதைய தொழில்நுட்ப சமூக பொருளாதார வளர்ச்சிகளும்சர்வதேச தரத்திற்கு ஏற்ப தரமான கல்வி தேவை என்பதை வலியுறுத்துகின்றன.

நாட்டின் எதிர்காலத்தை உருவாக்குவதில் ஆசிரியர்கள் மிகவும் அக்கறையுடனும், உறுதியுடனும் இருக்க வேண்டும். மாணவர்களுக்கும் மிகப்பெரிய பொறுப்புஇருக்கிறது. சமூக நெறி சார்ந்த ஆன்மிக மதிப்புக்களை மாணவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும் என்றார் கவர்னர் பாத்திமா பீவி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+