போலி அடையாள அட்டை.. தேர்தல் அதிகாரி எச்சரிக்கை
கோவை:
போலி வாக்காளர் அடையாள அட்டையைப் பெற முயற்சித்தால் அவர்களுக்கு 3 ஆண்டுகள் வரை கடும் தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்என கோவையில் தமிழகத் தேர்தல் அதிகாரி மிருத்யுஞ்சாய் சாரங்கி தெரிவித்தார்.
வாக்காளர் அடையாள அட்டை வழங்கும் பணியைப் பார்வையிட தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி மிருத்யுஞ்சாய் சாரங்கி கோவை வந்திருந்தார். அவர்நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
தமிழகத்திலேயே கோவையில் அடையாள அட்டை வழங்கும் பணி சிறப்பாக நடந்து வருகிறது. கோவையில் மட்டும் இதுவரை 4 லட்சம் பேருக்குஅடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. மாநில அளவில் 65 சதவீதம் வழங்கப்பட்டுள்ளது.
இரண்டாவது கட்ட அடையாள அட்டை வழங்கப்பட்ட பின்னர் வீடு வீடாகச் சென்று 100 சதவீத அடையாள அட்டை வழங்க தகுந்த நடவடிக்கைஎடுக்கப்படும். பின்னர் 10.9 சதவீதத்திற்கும் மேலான வாக்காளர் அடையாள அட்டை பெறப்படாமல் இருந்தால், சரிபார்க்கும் பணிமேற்கொள்ளப்படும்.
அடுத்து வரும் சட்டசபைத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் எலெக்ட்ரானிக் ஓட்டு இயந்திரம் பயன்படுத்தப்படும். 55 ஆயிரம் வாக்குச் சாவடிகளில்பயன்படுத்த 61 ஆயிரம் எலெக்ட்ரானிக் இயந்திரங்கள் தயாரிக்கப்படும். அடையாள அட்டை இல்லாதவர்கள் யாரும் ஓட்டுப் போட முடியாது.அடையாள அட்டை கட்டாயமாக்கப்படுகிறது. இந்த வாக்காளர் அடையாள அட்டை தேர்தலில் ஓட்டுப் போட மட்டுமல்ல, அனைத்து பணிகளுக்கும்பயனுள்ளதாக அமையும்.
போலி வாக்காளர் அட்டை பெற முயற்சிப்போர் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவர்களுக்கு 3 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனைகிடைக்க வாய்ப்பு உள்ளது என்றார் சாரங்கி. ஆலோசனைக் கூட்டத்தில் கோவை மாவட்ட கலெக்டர் சந்தானம், மாநகராட்சி கமிஷனர் ஹிதேஷ்குமார்மக்வானா ஆகியோர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications