சமதா கட்சி-ஐக்கிய ஜனதா தளம் இணையாது
மைசூர்:
ஐக்கிய ஜனதா தளத்துடன் சமதா கட்சியை இணைக்கும் திட்டம் இல்லை என்று மத்திய ராணுவ அமைச்சர் ஜார்ஜ் பெர்னான்டஸ் தெரிவித்தார்.
மைசூரில் சமதா கட்சியின் தேசிய கவுன்சில் கூட்டம் தொடங்கியது. இதில் கலந்து கொண்டு சமதா கட்சியின் நிறுவனத் தலைவர் ஜார்ஜ் பெர்னான்டஸ்கூறியதாவது:
ஐக்கிய ஜனதா தளம் உள்பட எந்தக் கட்சியுடனும் சமதா கட்சியை இணைக்கும் எண்ணம் இல்லை. இருப்பினும் அரசியலில் திடீர், திடீர் மாற்றங்கள்ஏற்பட்டு வருவதால் நாம் எதையும் சந்திக்கத் தயாராக இருக்க வேண்டும்.
சமதா கட்சி உடைந்து விட்டதாகக் கூறப்படுவது தவறு. சமதா கட்சி ஒற்றுமையாக இருக்கிறது. 12 எம்.பி.க்களும் சமதா கட்சியில் நீடிக்கும்போது அது உடைந்து விட்டது எனக் கூறுவது எப்படி சாத்தியமாகும் என்றார் ஜார்ஜ் பெர்னான்டஸ்.
புதிய தலைவர் தேர்தல்:
மைசூர் தேசிய கவுன்சில் கூட்டத்தில் சமதா கட்சியின் புதிய தலைவர் தேர்தல் திங்கள்கிழமை நடந்தது. கூட்டம் தொடங்கியதும் தலைவர் பதவிக்கு ஜெயாஜெட்லியின் பெயரை நிதிஷ்குமார் முன்மொழிந்தார். அவரை எதிர்த்து யாரும் போட்டியிடவில்லை.
இதையடுத்து ஜெயா ஜெட்லி போட்டியின்றி மீண்டும் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications