பிரதமரைச் சுற்றி ஊழல் கூட்டம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

பிரதமரைச் சுற்றியிருக்கும் பலரும் ஊழல் செய்து வருகின்றனர் என பாரதீய ஜனதா எம்.பி.,யான கே.கே. ஜெயின்புகார் கூறியுள்ளார்.

பாரிதீய ஜனதாவின் எம்.பி.,யும் ஜெயின் டிவியின் உரிமையாளருமான கே.கே ஜெயினுக்கும், பிரதமரின்முதன்மைச் செயலாளரான பிரிஜேஷ் மிஸ்ராவுக்கும் இடையே மோதல் இருந்து வருகிறது.

ஜெயின் ஐ.எஸ்.ஐ. உளவாளி என கூறி பிரதமர் அலுவலகத்திலிருந்து தகவல் அனுப்பப்பட்டது. பிரதமரைச் சுற்றிஇருப்பவர்கள் ஊழல் செய்வதை நான் டிவியில் வெளியிட்டதால் என் மேல் அவதூறாக புகார் கூறுகிறார்கள் எனஜெயின் தெரிவித்தார். இது குறித்து பிரதமரிடமும் ஜெயின் புகார் தெரிவித்தார். இதன் பின் ஜெயின் பா.ஜ.செயற்குழு பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.

தற்போது ஜெயின் மிஸ்ராவுக்கு எதிராக பல குற்றச்சாட்டுகளை கூறியுள்ளார். திங்கள்கிழமை அவர் நிருபர்களுக்குஅளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:

நான் ஐ.எஸ்.ஐ. உளவாளி இல்லை என பிரதமர் ஏற்றுக் கொண்டுள்ளார். அதை வெளிப்படையாக அறிவிக்கும்வரை போராடுவேன். பிரதமரைச் சுற்றியுள்ள பலரும் ஊழல் செய்து வருகின்றனர்.

கார்கில் போரின் போது ராணுவத்தின் முக்கிய பொறுப்பில் இருந்த அருண் மிஸ்ரா நீக்கப்பட்டதற்கும், பிரிஜேஷ்மிஸ்ராவுக்கும் தொடர்பு உள்ளது, அவரை உடனே பதவியிலிருந்து நீக்க வேண்டும் னெ கூறியிருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+