சேலத்தில் விஷச்சாராயம் அருந்தியவர் பலி
Subscribe to Oneindia Tamil
சேலம்:
சேலம் அருகே விஷ சாராயத்துக்கு ஒருவர் பலியானார்.
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகேயுள்ள கிருஷ்ணாபுரத்தில் வசித்து வருபவர் ராமசாமி (55). இவருக்கு மாத்தூர் பகுதியிலும் வீடு உள்ளது.
குடிப்பழக்கம் கொண்ட ராமசாமி மாத்தூர் காலனி அருகில் விற்பனை செய்யப்பட்டு வரும் சாராயத்தைக் குடிப்பது வழக்கம். திங்கள்கிழமை காலையிலும்மாத்தூர் காலனியில் விற்கப்பட்டு வந்த சாராயத்தை வாங்கிக் குடித்தார்.
சிறிது நேரத்தில் அதே இடத்தில் சுருண்டு விழுந்து இறந்தார். ராமசாமி விஷச்சாராயம் குடித்து இறந்தது குறித்து செய்தி பரவியதும் பெரிய கிருஷ்ணாபுரம்,மத்தூர், ஏத்தாப்பூர், வாழப்பாடி பகுதிகளில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
சாராய வியாபாரம் செய்து கொண்டிருந்த வியாபாரி சாராய கேன்களை எல்லாம் கீழே போட்டு விட்டு தப்பியோடி விட்டார். இச்சம்பவம் குறித்துபோலீசில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications