மருத்துவக் கல்லூரி மாணவர் நடுரோட்டில் தீக்குளிப்பு
உசிலம்பட்டி:
மதுரையைச் சேர்ந்த மருத்துக் கல்லூரி மாணவர் தேர்வு சரியாக எழுதாத காரணத்தால் நடு ரோட்டில் தீக்குளித்தார்.உயிருக்குப் போராடிய நிலையில் அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மதுரையில் வங்கியில் மானேஜராக பணி புரிந்து வருபவர் பரமசிவம். இவரது மகன் மார்ஷல் கில்டா மதுரைமருத்துவக் கல்லூரியில் படித்து வருகிறார்.
திங்கள்கிழமை காலை மதுரையிலிருந்து உசிலம்பட்டிக்கு பைக்கில் சென்று கொண்டிருந்தார் கில்டா. அவர்திடீரென வண்டியை நிறுத்தி வண்டியில் இருந்த பெட்ரோலை பிடித்து ஊற்றிக் கொண்டு தீ வைத்துக் கொண்டார்.
அந்த பகுதியில் சென்று கொண்டிருந்தவர்கள் அவரை காப்பாற்ற முயற்சி செய்தனர். ஆனால் அதற்குள் அவரதுஉடல் கருகிவிட்டது. ஆபத்தான நிலையில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
தேர்வு சரியாக எழுதாத காரணத்தால் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக கில்டா கூறினார். அவருக்கு அங்குதீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications