ரயிலில் தள்ளி மாணவி கொலை
திருவொற்றியூர்:
சென்னையை அடுத்த திருவொற்றியூரில் வசித்து வரும் பள்ளி மாணவியை கற்பழிக்க முயன்ற ரெளடிகள் அவரை ரயில் முன் தள்ளி கொலை செய்தனர்.
திருவொற்றியூர் கிராமத் தெருவைச் சேர்ந்தவர் ஹேமலதா. இவரது மகள் சசிகலா(15). இவர் ராயபுரத்தில் உள்ள ராமுன்னி ரமணிபாய் பள்ளியில் 9 ம்வகுப்பு படித்து வந்தார்.
சசிகலாவின் தந்தை நாகேஸ்வரராவ் தன் மனைவியைப் பிரிந்து வேறொரு பெண்ணுடன் குடித்தனம் செய்து வருகிறார்.
இந்நிலையில் ஹேமலதாவும், அவரது மகள் சசிகலாவும் தனியே வாழ்ந்து வந்தனர். சசிகலா ஒவ்வொரு வெள்ளிக்கிழமை மாலையிலும் அண்ணாமலைநகரிலுள்ள பெந்தகொஸ்தே சர்ச்சுக்குச் சென்று வருவது வழக்கம். இதே போல் கடந்த வெள்ளிக்கிழமையும் சர்ச்சுக்குச் சென்ற சசிகலா வெகுநேரம்ஆகியும் வீடு திரும்பவில்லை. இதையடுத்து அவரது தாய் ஹேமலதா அதிர்ச்சியடைந்து போலீஸில் புகார் கொடுத்தார்.
போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர். இதற்கிடையே அண்ணாமலை நகர் அருகே கொருக்குப்பேட்டை தண்டவாளத்தில் சிறுமி பிணம் ஒன்று தலைதுண்டிக்கப்பட்ட நிலையில் கிடப்பதாகப் போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. போலீஸார் உடனடியாக அங்கு சென்று பிணத்தைக் கைப்பற்றினர். பின்னர்ஹேமலதாவை அழைத்து அடையாளம் காட்டச் சொன்ன போது அது சசிகலாதான் என்று அடையாளம் தெரிய வந்தது.
இச்சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை செய்த போது கிடைத்த தகவல்கள்:
அண்ணாமலை புரம் ரயில்வே தண்டவாளத்தில் எப்போதும் ரவுடிக்கும்பல் ஒன்று கூட்டமாக நின்று அங்கு வரும் பெண்களையும், சிறுமிகளையும் கேலியும்,கிண்டலும் செய்து வரும். வெள்ளிக்கிழமை அதே வழியில் வந்த மாணவி சசிகலாவையும் கேலி செய்தது. அவரை கற்பழிக்கும் எண்ணத்துடன்துரத்தியிருக்கிறது.
அப்போது அவ்வழியே வந்த பெண்கள் சிலர் கூச்சல் போட்டு கத்தினர். சசிகலாவும் அந்தக் கும்பலை நன்கு அடையாளம் தெரிந்து கொண்டார். இனிமேல்சசிகலாவை விட்டு வைத்தால் அவர் போலீசில் தங்களைக் காட்டிக் கொடுத்து விடுவார்கள் என்று கருதி அக்கும்பல் அவரை ரயில் முன் தள்ளி கொலைசெய்தது.
அடையாளம் தெரியாமல் இருப்பதற்காக சசிகலாவின் முகத்தின் மீது பாறாங்கல்லால் சிதைத்து விட்டு தப்பியோடி விட்டது என்று போலீஸ் விசாரணையில்தெரிய வந்தது. இச்சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள். தப்பியோடி விட்ட ரவுடிக் கும்பல் குறித்தும் விசாரணை நடந்துவருகிறது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications