கூட்டணிக் கட்சிகள் கூட்டம் .. அதிமுக புறக்கணித்தது
சென்னை:
சென்னையில் திராவிட கழக அலுவலகத்தில் புதன்கிழமை நடந்த மதச்சார்பற்ற கூட்டணிக் கட்சிகள் கூட்டத்தில் அ.தி.மு.க.கலந்து கொள்ளவில்லை.
இதுகுறித்து திராவிட கழக பொதுச்செயலாளர் வீரமணி கூறியதாவது:
மத்தியில் பாரதிய ஜனதா கட்சி, விஸ்வ ஹிந்துப் பரிஷத்தின் உதவியுடன் மதவாத கொள்கையுடன் கூடிய ஆட்சியை நடத்துகிறது. இதை எதிர்த்து மனிதநேயபாதுகாப்பு தினம் ஜனவரி 22 ம் தேதி அனுசரிக்கப்படும். அந்த நாள் மனிதச் சங்கிலிப் போராட்டம் நடத்தப்படும்.
ஜனவரி 22 ம் தேதி தலைநகர் சென்னை மற்றும் பிற மாவட்டங்களில் மனித சங்கிலி போராட்டம் நடத்துவது குறித்து விவாதிப்பதற்காகமதச்சார்பற்ற கூட்டணி தலைவர்கள் புதன்கிழமை கூடி விவாதித்தனர். இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக அ.தி.மு.க.வுக்கும் அழைப்புவிடுக்கப்பட்டிருந்தது.
ஆனால் அ.தி.மு.க. இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. இது மதச்சார்பற்ற கூட்டணியில் உள்ள இதர கட்சிகளுக்கும், அ.தி.மு.க.வுக்கும்இடையே இடைவெளியை ஏற்படுத்தி விட்டது. ஆனால் அ.தி.மு.க.இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளாததற்கு வலுவான காரணம் ஏதாவதுஇருக்கலாம்.
மேலும் மனிதச்சங்கிலிப் போராட்டத்தில் மதச்சார்பற்றி கூட்டணிக் கட்சித் தலைவர்கள் அனைவரும் கலந்து கொள்வார்கள். புதன்கிழமை நடந்தகூட்டத்தில் தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் இளங்கோவன், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளர் பீட்டர் அல்போன்ஸ், சிபிஐ மாநிலபொதுச்செயலாளர் நல்லகண்ணு, சிபிஐ (எம்) சார்பில் வரதராஜன், இந்திய முஸ்லீம் லீக், இந்திய தேசிய லீக், ஜனதா தளம், அகில இந்திய பார்வர்டு பிளாக்,அம்பேத்கார் மக்கள் இயக்கம், இந்தியக் குடியரசுக் கட்சி ஆகியவை கலந்து கொண்டன.
இந்தக் கூட்டத்தை அ.தி.மு.க. ஏன் புறக்கணித்தது என்று தெரியவில்லை. பாரதிய ஜனதாவுடன் மீண்டும் அ.தி.மு.க.கூட்டணி வைத்துக் கொள்ளவிரும்புகிறதா என்பது குறித்து எனக்கு எதுவும் தெரியாது. இதுகுறித்து அ.தி.மு.க.பொதுச் செயலாளர் ஜெயலலிதா ஏற்கனவே பாரதிய ஜனதாவுடன்கூட்டணி இல்லை என்று தெளிவாகக் கூறி விட்டார்.
உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் இடிப்பு விஷயத்தில் மத்திய அமைச்சர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி மற்றும் உமாபாரதிக்குத் தொடர்பு உள்ளது. இந்த அமைச்சர்களை பிரதமர் வாஜ்பாய் பாதுகாத்து வருகிறார் என்றார் வீரமணி.
யு.என்.ஐ.
-
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications