இன்று தியாகராஜர் ஆராதனை விழா
திருவையாறு:
திருவையாறு தியாகராஜர் ஆராதனை விழா புதன்கிழமை தொடங்குகிறது.
தஞ்சை மாவட்டம் திருவையாறில் கர்நாடக இசை மேதை சத்குரு தியாகராஜரின் ஆராதனை விழா ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த ஆண்டு 154 வது ஆராதனை விழா புதன்கிழமை தொடங்கி 15 ம் தேதி வரை நடக்கிறது. புதன்கிழமை மாலை 5 மணிக்கு மங்கள இசையுடன் விழாதொடங்குகிறது.
தியாக பிரம்ம மகோத்சவ சபா வின் தலைவர் ஜி.கே.மூப்பனார் தலைமை தாங்குகிறார். செயலாளர் குன்னக்குடி வைத்தியநாதன் வரவேற்றுப்பேசுகிறார்.
மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் குத்துவிளக்கு ஏற்றி விழாவைத் தொடங்கி வைக்கிறார்.
11 ம் தேதி முதல் 15 ம் தேதி வரை புகழ்பெற்ற இசைக்கலைஞர்கள் தியாகராஜர் விழாவில் கலந்து கொண்டு பாடுகிறார்கள்.
14 ம் தேதி பொங்கல் அன்று தியாகராஜரின் ஆராதனை விழா காலை 6 மணி முதல் 10 மணி வரை நடைபெறுகிறது. இதில் புகழ்பெற்ற கர்நாடக இசைபாடகர்கள், நாதசுவர கலைஞர்கள், வயலின் கலைஞர்கள் ஒரே சமயம் 500 க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு பாடி அஞ்சலி செலுத்துவார்கள்.
தியாகராஜர் ஆராதனை விழாவையொட்டி ரூ 18 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள தியாகராஜர் விருந்தினர் மாளிகையை மத்திய அமைச்சர் சுஷ்மாசுவராஜ் முன்னிலையில் ஜி.கே.மூப்பனார் புதன்கிழமை திறந்து வைக்கிறார்.
-
பாஜகவுடன் கூட்டணி வைக்கலாம்.. எழுதிக் கொடுத்த மாவட்டச் செயலாளர்கள்.. நாளை விஜய் எடுக்கும் முடிவு? -
விரால் மீனின் ஸ்பெஷாலிட்டி இது.. பாம்பு தலையன் மீனுக்குள் அற்புதமான சீக்ரெட்! பெண்களின் வரப்பிரசாதம் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை பழிதீர்த்த கர்மா.. முத்துவால் ஏற்பட்ட குழப்பம்.. சந்தோஷத்தில் ரோகிணி -
ஜான் ஆரோக்கியசாமி போட்ட மெகா ஸ்கெட்ச்.. மிரண்டு போன பாஜக மேலிடம்.. B டீம் முத்திரையை உடைப்பாரா விஜய் -
Rasi Palan: கடகம், சிம்மம், கன்னிக்கு மார்ச் மாதத்தில் அடிக்குமா ஜாக்பாட்.. முழு பலன்கள் விவரம் -
அதிமுக எம்பியாக இருந்தபோதே கனிமொழி அக்கா எனக்கு பயிற்சி கொடுத்தார்.. ஓ.பி. ரவீந்திரநாத் -
ஸ்டன் ஆன விஜய்.. "80 சீட்+ துணை முதல்வர்" எல்லாம் ஓகே.. ஆனா ஒரு விஷயத்தை யோசிக்கும் தவெக தலைமை -
Rasi Palan: துலாம், விருச்சிகம், தனுசு ராசிக்கான மார்ச் மாத பலன்.. முழு விவரம் இதோ -
அதில் இருந்தது கோழி கால் இல்லை.. சொமாட்டோ பிரியாணி பார்சலில் இருந்தது? அலற விட்ட 28 நிமிட வீடியோ -
விஜய்க்கு புது ஆஃபர் கொடுக்கும் பாஜக? 80 தொகுதி + துணை முதல்வர் பதவி! டெல்லியில் பரபர பாலிடிக்ஸ் -
தவெகவில் பணக்கஷ்டம்.. ரூ.5 கோடி செலவு செய்ய வேட்பாளர்கள் இல்லை.. கூட்டணி செல்வது தான் சரி.. விஜய்க்கு அழுத்தம் -
மீண்டும் தள்ளிப்போகும் தேர்தல் தேதி அறிவிப்பு.. பின்னணியில் 3 காரணங்கள்.. தமிழகம் உள்பட 5 மாநில வாக்குப்பதிவு எப்போது?












Click it and Unblock the Notifications