ராமதாசுடன் சந்திப்பு..விளக்கம் கூற முதல்வர் மறுப்பு
சென்னை:
பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனத் தலைவர் டாக்டர் ராமதாஸூடன் நடந்த சந்திப்பு குறித்து முதல் கருணாநிதி விளக்கம் கூற மறுத்து விட்டார்.
செவ்வாய்க்கிழமை மாலை ராமதாஸூம், கருணாநிதியும் திடீரென சந்தித்துப் பேசினர். சுமார் 30 நிமிடங்கள் நடந்த இந்த சந்திப்பில் என்ன பேசினார்கள்என்பது குறித்து விவரம் எதுவும் தெரியவில்லை.
இதற்கிடையே புதன்கிழமை முதல்வர் கருணாநிதி நிருபர்களைச் சந்தித்தார். அப்போது நிருபர்கள் அவரிடம், திமுக வில் தமிழக ராஜீவ் காங்கிரஸ் இருந்தால்பாட்டாளி மக்கள் கட்சி தி.மு.க கூட்டணியிலிருந்து விலகும் என்று ராமதாஸ் கூறி வருகிறாரே என்றனர். அதற்குப் பதிலளித்த கருணாநிதி இது குறித்து நான்எதுவும் கருத்துக் கூற விரும்பவில்லை என்றார்.
மேலும் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
வரும் சட்டசபைத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள பாரதிய ஜனதா கட்சி 2 வது மிகப்பெரிய கட்சியாக அதாவது அதிக தொகுதிகளில்போட்டியிடும் என்று கூறியதாக பத்திரிக்கைகளில் படித்தேன். அது மிகவும் வருத்தமான விஷயம்.
தமிழகத்தில் வரும் சட்டசபைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி தனியான தேர்தல் திட்டத்தை வகுக்கும் என்று கூறி வருகிறது. ஒவ்வொரு கட்சிக்கும்என்று ஒவ்வொரு தேர்தல் திட்டம் இருக்கும். இதில் யாரும் குறுக்கிட முடியாது.
மேற்கு வங்காளத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்று கூறுகிறார்கள். அதுகுறித்து நான் எதுவும் கருத்துக் கூற விரும்பவில்லை.
கடந்த மாதம் தஞ்சாவூரைச் சேர்ந்த தி.மு.க தொண்டர்களுடன் தேர்தல் நிலவரம் குறித்துப் பேச்சுவார்த்தை நடத்தினேன். அதே போல் புதன்கிழமைகோவை மாவட்ட தி.மு.க தொண்டர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினேன். இதே போல் வியாழக்கிழமை தூத்துக்குடி மாவட்ட தி.மு.க தொண்டர்களுடன்தேர்தல் நிலவரம் குறித்துப் பேச்சுவார்த்தை நடத்தத் திட்டமிட்டுள்ளேன்.
புதன்கிழமை நடந்த கூட்டத்தில் கட்சி பொதுச்செயலாளர் அன்பழகன், ஆற்காடு வீராசாமி ஆகியோர் பங்கேற்றனர் என்றார்.
யு.என்.ஐ.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications